ராஜஸ்தானில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் மீது இருவர் சிறுநீர் கழித்து தாக்கி துன்புறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருமண ஊர்வலத்தைப் பார்த்ததற்காக, மாற்று சமூகத்தைச் சேர்ந்த இருவர் இளைஞரை தனியாக அழைத்துச் சென்று ஆடைகளை அவிழ்த்து பாலியல் வன்கொடுமையிலும் ஈடுபட்டுள்ளனர்.
இதனை விடியோ பதிவு செய்த அவர்கள், இச்சம்பவம் குறித்து வெளியே கூறினால் விடியோவை சமூகவலைதளத்தில் வெளியிட்டுவிடுவதாக மிரட்டியுள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலம் சிகர் மாவட்டத்தின் ஃபதேபூர் பகுதியைச் சேர்ந்த, பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 19 வயது இளைஞர், மாற்று சமூகத்தைச் சேர்ந்த இரு இளைஞர்களால் சாதிய வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டுள்ளார்.
ஏப். 8ஆம் தேதி நடைபெற்ற இச்சம்பவம் குறித்து, பாதிக்கப்பட்ட இளைஞரின் குடும்பத்தினர் ஏப். 16ஆம் தேதி காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர்.

