நிர்வாகக் குழு கூட்டத்தில் சமாதானம்
மாவட்டச் செயலாளர்கள், மூத்த நிர்வாகிகள், பொருளாளர், அவைத் தலைவர் உள்ளிட்டோர் பங்கேற்ற நிர்வாகக் குழு கூட்டத்தில், அனைவரும் மனம்விட்டு தங்கள் கருத்துகளைப் பகிர்ந்தனர். மல்லை சத்யா, தன்மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து, “சில நிகழ்வுகளால் ஏற்பட்ட தவறுகளுக்கு வருத்தம் தெரிவிக்கிறேன். இனி இயக்கத்துக்கும், தலைவர் வைகோவுக்கும், முதன்மைச் செயலாளருக்கும் உறுதுணையாகவும், பக்கபலமாகவும் செயல்படுவேன்,” என்று வாக்குறுதி அளித்தார்.

