Last Updated:
குஜராத் அணி கேப்டன் ஷுப்மன் கில்லுக்கு பந்து வீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இது நடப்புத் தொடரில் கில்லுக்கு முதல் முறை.
நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட பந்து வீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் குஜராத் அணி கேப்டன் ஷுப்மன் கில்லுக்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட்டில் சனிக்கிழமை 35 ஆவது லீக் போட்டியில் குஜராத்-டெல்லி அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்து வீசியது. 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 203 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய குஜராத் அணி 4 பந்துகள் மீதம் இருக்கும்போதே 204 ரன்களை எடுத்து, வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் குஜராத் அணி அபார வெற்றி பெற்றாலும், முதலில் பந்து வீச அதிக நேரம் எடுத்துக்கொண்டது. பந்து வீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் ஐபிஎல் விதிப்படி, அணிகளின் கேப்டன்களுக்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
அதன்படி சனிக்கிழமை போட்டியில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் குஜராத் அணி கேப்டன் ஷுப்மன் கில்லுக்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. நடப்புத் தொடரில் குஜராத் அணி கேப்டன் கில் அபராதத்தை எதிர்கொள்வது இது முதல் முறையாகும்.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
April 20, 2025 9:39 PM IST


