Last Updated:
சீனா மற்றும் அமெரிக்காவுக்கு இடையே வர்த்தகப் பதற்றம் அதிகரித்துள்ளதால் நிலையான லாபம் தரும் தங்கத்தின் மீது முதலீடு செய்ய ஆர்வம் அதிகரித்துள்ளது.
தங்க நகை வாங்க விரும்புவோருக்கு. அதிர்ச்சியான தகவலை வர்த்தக நிபுணர்கள் தெரிவித்துள்ளார்கள். கடந்த சில வாரங்களாக தங்கத்தின் விலை படிப்படியாக உயர்ந்து கொண்டே. வருகிறது. இதற்கு ஏராளமான காரணங்களை பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.
சர்வதேச அளவில் நாடுகளுக்கு இடையே காணப்படும் நிலையற்ற தன்மை. அமெரிக்கா அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் கண்மூடித்தனமான வரி விதிப்பு, வல்லரசு நாடுகள் தங்கத்தை. வாங்கி குவிப்பது உள்ளிட்டவை தங்கம் விலை உயர்வுக்கு காரணங்களாக கூறப்படுகிறது.
சீனா மற்றும் அமெரிக்காவுக்கு இடையே வர்த்தகப் பதற்றம் அதிகரித்துள்ளதால் நிலையான லாபம் தரும் தங்கத்தின் மீது முதலீடு செய்ய ஆர்வம் அதிகரித்துள்ளது. இதனால் உலக அளவில் தங்கம் வாங்கி குவிக்கப்படுவதால் அதன் விலை உயர்ந்திருப்பதாகவும் வர்த்தக நிபுணர்கள் கூறுகிறார்கள். 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் 17 ஆம் தேதி அன்று 10 கிராம் தங்கத்தின் விலை 44,906 ரூபாயாக இருந்தது. இந்நிலையில் கடந்த 17 ஆம் தேதி 10 கிராம் தங்கம் 95,239 ரூபாயாக உயர்ந்திருக்கிறது.
நடப்பு ஆண்டில் மட்டும் 25% அளவுக்கு தங்கத்தின் விலை. உயர்ந்துள்ளது. பொருளாதார மந்தநிலை காரணமாக தங்கத்தின் விலை குறைவதற்கு வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் மீது தாறுமாறாக. வரிகளை விதித்து வருகிறார்.
இதனால் அமெரிக்க பொருளாதாரமும் குறையக்கூடும் என நிபுணர்கள் கடந்த சில நாட்களாக எச்சரிக்கை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில். 10 கிராம் தங்கத்தின் விலை. வரும் நாட்களில் ₹1,00,000 அளவுக்கு உயர வாய்ப்புள்ளதாகவும் பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றன.
தொடர்ச்சியாக ஏற்பட்டு வரும் வர்த்தக பதற்றங்கள், பணவீக்க அழுத்தம் மற்றும் மத்திய வங்கியான ரிசர்வ் வங்கியின் தங்கத்தின் கொள்முதல் உள்ளிட்டவை விலை உயர்வை ஏற்படுத்தும் என்று தகவல்கள் கூறுகின்றன.
April 20, 2025 6:09 PM IST


