• Login
Tuesday, April 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

மீன் வாங்க போட்டா போட்டி… தடைக்காலத்தால் தட்டுப்பாடு… விர்ரென்று எகிறிய விலை…

GenevaTimes by GenevaTimes
April 20, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
மீன் வாங்க போட்டா போட்டி… தடைக்காலத்தால் தட்டுப்பாடு… விர்ரென்று எகிறிய விலை…
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:April 20, 2025 2:32 PM IST

Fish Prices Hike: மீன்பிடித் தடைக்காலத்தால் மீன் வரத்து குறைந்துள்ள நிலையில் கோடை விடுமுறையால் மீன்களுக்கான தேவையும் உயர்ந்துள்ளது.

X

மீன்

மீன் வாங்க போட்டா போட்டி… தடைக்காலத்தால் தட்டுப்பாடு… விர்ரென்று எகிறிய விலை…

தூத்துக்குடி மாவட்டத்தில் பிரதானத் தொழிலாக மீன்பிடித் தொழில் இருந்து வருகிறது. இந்த மாவட்டத்தில் தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகம், தருவைக்குளம், வேம்பார் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து தினசரி ஆயிரக்கணக்கான மீனவர்கள் கடலுக்குச் சென்று மீன் பிடித்து வருகின்றனர்.

இந்நிலையில், தற்போது மீன்பிடித் தடைக்காலம் ஏப்ரல் 15ஆம் தேதியிலிருந்து தொடங்கி உள்ளதால் விசைப்படகு கடலுக்குள் செல்ல அனுமதி இல்லை. இதனால் நாட்டுப் படகு மீனவர்கள் மட்டுமே கரையிலிருந்து சிறு தூரம் கடலுக்குள் சென்று மீன்பிடித்து வருகின்றனர். இதனால் மீன்களுக்கு டிமாண்ட் ஏற்பட்டுள்ளதால் மீன்களின் விலையும் உயர்ந்து காணப்படுகிறது.

தூத்துக்குடியில் பிடிக்கப்படும் மீன்கள் மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இங்கிருந்து, தமிழ்நாட்டின் பிற பகுதிகள் மற்றும் வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதியும் செய்யப்படுகிறது.

இதையும் படிங்க: Car Maintenance for Summer: ஏசி கூட எரிமலையாகும்… எஞ்சின் ஆயில் கொதிக்கும்… இந்த சம்மரில் உங்க காரையும் கேர் பண்ணுங்க…

தூத்துக்குடி நகர் பகுதியில் மீன் விற்பனைக்கு என பிரத்தியேகமான மார்க்கெட்டும் இயங்கி வருகிறது. இந்த மீன் மார்க்கெட்டில் அனைத்து வகையான மீன்களும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த மார்க்கெட் தினமும் காலை 7 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை பரபரப்பாகச் செயல்படுகிறது. நகரின் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் இங்கு வந்து தங்களுக்குத் தேவையான மீன்களை வாங்கிச் செல்கின்றனர்.

இந்த தடைக்காலத்தில் மீன் வியாபாரம் குறித்து மார்க்கெட் வியாபாரி கூறுகையில், “தூத்துக்குடி விஓசி மார்க்கெட்டில் செயல்பட்டு வரும் மீன் மார்க்கெட்டில் நண்டு, கனவா, இறால், சாலை, நெத்திலி, நகரை, ஷீலா, ஊளி போன்ற அனைத்து மீன்களும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் தடைக்காலம் என்பதால் குறைந்த ரக மீன்கள் தான் விற்பனைக்குக் கொண்டு வரப்படுகிறது. வரத்தும் குறைந்து காணப்படுகிறது.

1 கிலோ ஷீலா மீன் ரூ.1600, விலை மீன் கிலோ ரூ.600, பாறை மீன் கிலோ ரூ.500, இறால் கிலோ ரூ.450, சாளை மீன் கிலோ ரூ.300, நகரை கிலோ ரூ.500 வரை விற்பனையாகின்றது” எனத் தெரிவித்தார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Location :

Thoothukkudi,Tamil Nadu

First Published :

April 20, 2025 2:30 PM IST

Read More

Previous Post

'இதுபோன்ற போட்டிகள் நல்ல பண்பை உருவாக்குகின்றன.. இது ஒரு அற்புதமான வெற்றி': லக்னோ கேப்டன் ரிஷப் பந்த் சொல்கிறார்

Next Post

விஜய் கலைத்துறையை விட்டு செல்லக்கூடாது – மிஷ்கின் | Makkal Osai

Next Post
விஜய் கலைத்துறையை விட்டு செல்லக்கூடாது – மிஷ்கின் | Makkal Osai

விஜய் கலைத்துறையை விட்டு செல்லக்கூடாது - மிஷ்கின் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin