கார் விபத்தில் படுகாயம் அடைந்து 450 நாட்களுக்கு பின்னர் ரிஷப் பந்த் இன்று ஐபிஎல் போட்டியில் அரை சதம் அடித்து ரசிகர்களின் பாராட்டை பெற்றுள்ளார்.
2022 ஆம் ஆண்டு டிசம்பர் 30 ஆம் தேதி கார் விபத்தை எதிர்கொண்ட ரிஷப் பந்திற்கு படுகாயம் ஏற்பட்டது. விபத்தின்போது அவரது கார் முற்றிலுமாக சேதம் அடைந்த நிலையில், அவர் உயிர் பிழைப்பாரா என்ற சந்தேகம் ஏற்பட்ட நிலையில், தீவிர சிகிச்சைக்கு பின்னர் அவர் காப்பாற்றப்பட்டார்.
பின்னர் ரிஷப் பந்த்திற்கு 5க்கு அதிகமான அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன. இதன்பின்னர் 2023 இல் நடந்த ஐபிஎல், உலகக்கோப்பை என முக்கிய தொடர்கள் அனைத்திலும் அவர் விளையாடவில்லை. அதிர்ஷ்டவசமாக விபத்தின்போது அவரது உடல் உறுப்புகள் ஏதும் நீக்கப்பட வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.
காயத்திலிருந்து குணம் அடைந்த ரிஷப் பந்த் கடந்த 6 மாதங்களாக தீவிர பயிற்சி மேற்கொண்டு வந்தார். சில வாரங்களுக்கு முன்பு அவர் மீண்டும் டெல்லி அணியின் கேப்டனாக களம் இறங்குவார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வந்தது.
இந்த நிலையில், விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் ரிஷப் பந்த் 32 பந்துகளில் 3 சிக்சர் மற்றும் 4 பவுண்டரியுடன் 51 ரன்கள் குவித்தார்.
Instant Dopamine ALERT ⚠️pic.twitter.com/ycL4UM0Ye9
— Delhi Capitals (@DelhiCapitals) March 31, 2024
விபத்து ஏற்பட்டு 453 நாட்களுக்கு பின்னர் அவர் அரை சதம் அடித்ததுடன் தனது பழைய ஆட்டத்தை வெளிப்படுத்தியது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த போட்டியில் டெல்லி அணி 20 ஓவர்களில் 191 ரன்கள் எடுத்துள்ளது.
இதையடுத்து 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி சென்னை அணியின் பேட்ஸ்மேன்கள் விளையாடி வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)