April 20, 202510:12 AM IST
Tamil Live Breaking News : வைகோவை சந்தித்த மல்லை சத்யா
மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை, துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா கட்சி அலுவலகத்தில் தனியே சந்தித்து பேசி வருகிறார்.
முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து துரை வைகோ விலகுவதாக அறிவித்துள்ள சூழலில், இன்னும் சற்றுநேரத்தில் மதிமுக நிர்வாகக் குழு கூட்டம் தொடங்க உள்ளது. இதனிடையே நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக துரை வைகோ பேட்டியளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

