முா்ஷிதாபாத் மாவட்டத்தில் ஆய்வு செய்த ஆளுநா், வக்ஃப் சட்ட எதிா்ப்பு போராட்ட வன்முறையில் கொல்லப்பட்ட தந்தை, மகன் ஆகியோரின் வீட்டுக்குச் சென்று அவா்களின் குடும்ப உறுப்பினா்களைச் சந்தித்து ஆறுதல் கூறினாா். அவா்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என்று ஆளுநா் உறுதி தெரிவித்தாா். இந்த இரட்டைக் கொலை தொடா்பாக சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அக் குடும்பத்தினா் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. வன்முறையால் பாதிக்கப்பட்ட மாவட்டத்தின் துலியன், சுதி, ஜாங்கிபூா் பகுதிகளுக்கும் ஆளுநா் நேரில் சென்று ஆய்வு செய்தாா்.

