Last Updated:
பீகார் மாநிலம் தஜ்பூர் என்ற கிராமத்தில் 2011 மார்ச் 27 ஆம் தேதி வைபவ் சூர்யவன்ஷி பிறந்தார். தனது 9 வயதிலேயே பீகார் அணிக்காக விளையாடினார்
ஐபிஎல் வரலாற்றில் மிகக்குறைந்த வயதில் கிரிக்கெட் விளையாடிய வீரர் என்ற சாதனையை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வைபவ் சூர்யவன்ஷி இன்று ஏற்படுத்தியுள்ளார்.
ராஜஸ்தான் மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ராஜஸ்தான் விளையாடியது. இந்த போட்டியின்போது ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரராக 14 வயதாகும் வைபவ் சூர்யவன்ஷி அறிமுகமானார். ஐபிஎல் வரலாற்றில் மிகக் குறைந்த வயதில் விளையாடிய வீரர் என்ற சாதனையை இவர் ஏற்படுத்தியுள்ளார்.
முன்னதாக 2019 ஆம் ஆண்டு பெங்களூரு அணிக்காக பிரயாஸ் ரே பர்மான் தனது 16 வயதில் அறிமுகமானார். அந்த ரிக்கார்டை இன்றைய போட்டியில் அறிமுகமானதன் மூலம் முறியடித்துள்ளார் சூர்யவன்ஷி.
அவருக்கு வயது 14 ஆண்டுகள் 23 நாட்கள் ஆகின்றன. இன்றைய போட்டியில் காயம் காரணமாக சஞ்சு சாம்சன் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக ரியான் பராக் கேப்டனாக செயல்பட்டார்.
ஐபிஎல் தொடங்கப்பட்ட பின்னர் பிறந்த வைபவ் சூர்யவன்ஷி இன்றைய போட்டியில் அறிமுகமானது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது. பீகார் மாநிலம் தஜ்பூர் என்ற கிராமத்தில் 2011 மார்ச் 27 ஆம் தேதி வைபவ் சூர்யவன்ஷி பிறந்தார். தனது 9 வயதிலேயே பீகார் அணிக்காக விளையாடினார்.
12 வயதில் வினோ மன்கட் கோப்பை தொடரில் விளையாடிய சூர்யவன்ஷி 5 போட்டிகளில் 400 ரன்கள் குவித்தார். ரஞ்சி தொடரில் 2023 ஆம் ஆண்டு பீகார் அணிக்காக விளையாடிய போது அவருக்கு வயது 12 ஆண்டுகள் 283 நாட்களாகும்.
இதையும் படிங்க – சென்னை அணியில் இணைந்த முன்னாள் MI வீரர்.. யார் இந்த குட்டி ஏபி டி வில்லியர்ஸ்?
வைபவ் சூர்யவன்ஷிக்கு 13 வயதாக இருக்கும்போதே அவரை கடந்த ஆண்டு நடந்த மெகா ஏலத்தின்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ. 1.10 கோடிக்கு வாங்கியது என்பது கவனிக்கத்தக்கது.
April 19, 2025 11:08 PM IST


