Last Updated:
ஐபிஎல் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சூழலில் பிசிசிஐ தரப்பிலிருந்து வெளியாகியுள்ள இந்த அலெர்ட் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சூதாட்டம் நடைபெற வாய்ப்புள்ளதாக ஐபிஎல் அணிகளுக்கு பிசிசிஐ எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஹைதராபாத்தைச் சேர்ந்த சந்தேகத்திற்குரிய தொழிலதிபர் ஒருவர் ஐபிஎல் சூதாட்டத்தை நடத்தலாம் என்ற எச்சரிக்கையை பிசிசிஐ எச்சக்கை எடுத்து இருக்கிறது. இதனால், ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள், வீரர்கள், பயிற்சியாளர்கள், உதவி பணியாளர்கள், வர்ணனையாளர்கள் உள்ளிட்ட மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று பிசிசிஐ கூறியுள்ளது.
ஐபில் தொடரில் சூதாட்டம், ஊழல் உள்ளிட்டவற்றை தடுப்பதற்காக பிசிசிஐ ஊழல் தடுப்பு பாதுகாப்பு பிரிவை ஏற்படுத்தியுள்ளது. இவர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ஐபிஎல் அணிகளை அலெர்ட் செய்துள்ளது பிசிசிஐ.
சூதாட்டத்தில் ஹைதராபாத் சேர்ந்த ஒரு தொழிலதிபர், மற்ற அணிகள், அணிகளின் உரிமையாளர்கள், வீரர்களை சூதாட்டத்தில் ஈடுபட வைக்க அதிக வாய்ப்புள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சந்தேகத்திற்குரிய நபர் கிரிக்கெட் ரசிகர்களை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
அந்த வகையில், விலை உயர்ந்த பரிசுகளுடன் அறிமுகம் இல்லாத நபர்களிடத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இதன் அடிப்படையில், ஒரு குறிப்பிட்ட நபர் ரசிகர் போன்று தோற்றத்தில் ஐபிஎல் பங்கேற்பாளர்களுடன் நெருங்கி பழக முயற்சித்து வருகிறார் என்று கூறப்படுகிறது.
அவர் கிரிக்கெட் வீரர்கள் தங்கும் ஓட்டல்களிலும், மைதானங்களிலும் இடம்பெற்று இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் தொடர்ந்து வீரர்களுடனும், பணியாளர்களுடன் நெருங்கி பழக முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. வீரர்களுக்கு மட்டுமின்றி, அவர்களது குடும்பத்தினருக்கும் பரிசுகளை அந்த நபர் வழங்க முயற்சிப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்த அடிப்படையில, அவர் சூதாட்டத்தில் ஈடுபட வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ள பிசிசிஐ, அவர், அந்த நபரிடம் கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. ஐபிஎல் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சூழலில் பிசிசிஐ தரப்பிலிருந்து வெளியாகியுள்ள இந்த அலெர்ட் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
April 17, 2025 8:36 AM IST


