அப்போது அங்கு வந்த கெவின் பீட்டர்சன் கில்லுடன் உரையாடினார். அப்போது அவரை நலம் விசாரித்த பீட்டர்சன், மென்டர்னா என்ன? என கேள்வி எழுப்பினார். அப்போது அங்கிருந்த கே.எல்.ராகுல், மென்டர்னா ஐபிஎல் மேட்ச் நடந்து கொண்டிருக்கும்போது நடுவில் மாலத்தீவுக்கு சுற்றுப் பயணம் செய்து வந்தவர் என கெவின் பீட்டர்சன் பெயரைக் குறிப்பிடாமல் கலாய்த்தார். இந்த வீடியோவை டெல்லி கேபிடல்ஸ் தனது எக்ஸ் சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து, ‘நன்றி கேஎல். இப்போது மென்டர் என்ன செய்கிறார் என எங்களுக்கு தெரிந்துவிட்டது’ என்று ஜாலியாக பதிவு வெளியிட்டது.

