• Login
Saturday, March 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

தென்னையை விட வருமானம் ஜாஸ்தி… பொள்ளாச்சி விவசாயிகளைக் கவரும் ஜாதிக்காய் சாகுபடி…

GenevaTimes by GenevaTimes
April 19, 2025
in வணிகம்
Reading Time: 1 min read
0
தென்னையை விட வருமானம் ஜாஸ்தி… பொள்ளாச்சி விவசாயிகளைக் கவரும் ஜாதிக்காய் சாகுபடி…
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தென்னையை விட ஆண்டுக்கு ரூ.4000 வரை அதிக லாபம் கிடைப்பதால் பொள்ளாச்சி, ஆனைமலை, கோட்டூர் மற்றும் தமிழக எல்லையோரக் கிராமங்களில் விவசாயிகள் தென்னையில் ஊடுபயிராக ஜாதிக்காய் சாகுபடி செய்து வருகின்றனர்.

கேரளா மாநிலத்தை விட பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளான ஆனைமலை மற்றும் கோட்டூர் பகுதிகளில் விளைவிக்கப்படும் ஜாதிக்காய் உயர்தரமாக உள்ளதால் ஏற்றுமதியாளர்கள் போட்டி போட்டு நல்ல விலைக்கு வாங்கிச் செல்கின்றனர்.

உங்கள் பகுதியில் அமைந்திருக்கும் மருத்துவமனைகள், மருத்துவர்கள் குறித்து மேலும் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்யவும்

ஆண்டுதோறும் ஜூன் முதல் நவம்பர் வரை ஜாதிக்காய் அறுவடை செய்யப்பட்டு விற்பனைக்காக வெளி மாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் அனுப்பப்படுகின்றன. ஜாதிக்காய் சாகுபடி குறித்து பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் மலையாண்டி பட்டினத்தைச் சேர்ந்த விவசாயி ரஞ்சித் கூறுகையில், “கொக்கோ பயிரிட்டு இருந்த நிலையில் இதற்குப் பணியாட்கள் அதிகமாகத் தேவைப்பட்டு வந்ததால் தற்போது கொக்கோவில் இருந்து மாறி பத்து வருடங்களாகச் சுமார் பத்து ஏக்கர் பரப்பளவில் தென்னை மரங்களுக்கு நடுவே ஊடுபயிராக ஜாதிக்காய் விவசாயம் செய்து வருகிறேன்.

முதலில் ஏழு, எட்டு வருடங்களாக வியாபாரிகள் வீடு வீடாக வந்து வாங்கிச் செல்வார்கள். ஜாதிக்காயில் இரண்டு பொருள் இருக்கிறது. ஒன்று ஜாதிக்காய், ஒன்று ஜாதி பூ. இதை ஜாதிபத்திரி என்று சொல்வார்கள். ஒவ்வொரு வியாபாரிகளும் ஒவ்வொரு விலை சொல்லி வாங்குவார்கள். இங்குச் சுற்றியுள்ள 120 விவசாயிகளுக்குக் கடந்த மூன்று வருடங்களாகக் கொடுத்து வருகிறோம்.

தென்னை நகரம் என்று அழைக்கப்படும் பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயிகள் அதிக அளவில் தென்னையைப் பயிரிட்டு வந்த நிலையில் தென்னையை விட லாபம் ஈட்டித் தரக்கூடிய ஜாதிக்காய் அதிக அளவில் தற்போது பயிரிட்டு உள்ளனர்.

இதையும் படிங்க: Moringa Powder Benefits: இரும்பு மாதிரி உடம்பு… டெய்லி முருங்கை பொடி சாப்பிட்டா இவ்வளவு பலன் கிடைக்குமா..

சில இடைத்தரகர்கள் ஜாதிக்காய் மிகவும் குறைந்த விலைக்கு எங்களிடம் வாங்கிச் சென்று வந்த நிலையில் தற்போது கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாகவும் விவசாயிகளை ஒன்றிணைத்து உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் என்று ஒன்றை ஆரம்பித்து இதன் மூலமாக இப்பகுதியில் உள்ள விவசாயிகளின் ஜாதிக்காய் சுமார் 100 டன்னிலிருந்து 120 டன் ஜாதிக்காய் ஏற்றுமதி செய்து வருகிறோம்.

ஆனால் கேரளாவில் 18000 டன் ஏற்றுமதி செய்து வரும் நிலையில் பொள்ளாச்சி பகுதியில் வரும் ஜாதிக்காய் மிகவும் உயர்தரமாக உள்ளதால் டெல்லி, பாம்பே போன்ற பகுதிகளிலிருந்து வியாபாரிகள் தாங்களாகவே வந்து பெற்றுக் கொண்டு செல்கின்றனர்.

தற்போது தென்னை மரங்களில் போதிய விளைச்சல் மற்றும் லாபம் கிடைக்காததால் விவசாயிகள் தென்னை மரங்களுக்கு நடுவே ஊடுபயிராக ஜாதிக்காய் பயிரிட்டு உள்ளனர். ஒரு கிலோ தற்போது 400 ரூபாயிலிருந்து விற்பனையாகி வருகிறது.

இதையும் படிங்க: Business Ideas: இளைஞர்களே பிஸ்னஸ் ஸ்டார்ட் பண்ண ஆசையா… உங்க ஊரில் சக்ஸஸ் ஆகும் சிறந்த பிஸ்னஸ் ஐடியா…

ஜாதிக்காய் பூவின் உடைய தரத்தைப் பொறுத்து ரூ.1700 முதல் ரூ.2800 வரை விவசாயிகளிடமிருந்து வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். தென்னையை விட வருடத்திற்கு ஜாதிக்காய் மரம் ஒன்று ரூ.3000 முதல் ரூ.4000 ரூபாய் வரை அதிகமாக வருமானம் ஈட்டித் தருவதாகவும் இதனால் தற்போது விவசாயிகளுக்குக் கூடுதல் வருமானமாக உள்ளது” எனத் தெரிவித்தார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Location :

Coimbatore,Tamil Nadu

First Published :

April 19, 2025 12:36 PM IST

Read More

Previous Post

‘கவுதம் காம்பீருடன் வாக்குவாதம் நடந்தது’ – சிட்னி டெஸ்டிலிருந்து விலகியது குறித்து முதன்முறையாக ரோஹித் சர்மா பதில்

Next Post

ஏப்.30-க்குள் 80,000 ஆப்கானியர்களை நாட்டைவிட்டு வெளியேற்றிய பாகிஸ்தான் | ahead of April 30 deadline Pakistan expels over 80,000 Afghans

Next Post
ஏப்.30-க்குள் 80,000 ஆப்கானியர்களை நாட்டைவிட்டு வெளியேற்றிய பாகிஸ்தான் | ahead of April 30 deadline Pakistan expels over 80,000 Afghans

ஏப்.30-க்குள் 80,000 ஆப்கானியர்களை நாட்டைவிட்டு வெளியேற்றிய பாகிஸ்தான் | ahead of April 30 deadline Pakistan expels over 80,000 Afghans

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin