அதுவும் ஐபிஎல் தொடர் என்று வந்துவிட்டால், பலரும் பரிசுகள் கொடுக்கும் ஆஃப்கள் மூலம் 11 வீரர்களை தேர்வு செய்து தங்களுக்கு பரிசு கிடைக்குமா என்று எதிர்ப்பார்த்தபடி உள்ளனர்.
பல ஆஃப்களில் முதல் பரிசாக ரூ.3 கோடி கிடைக்கிறது. அப்படி ஒருவருக்கு ரூ.3 கோடி பரிசாக கிடைத்தால், வரிகள் போக அவர்கள் வங்கி கணக்கிற்கு எவ்வளவு பணம் வரும் தெரியுமா?
அந்த ஆஃப்களில் உங்களுக்கு ரூ.3 கோடி பரிசாக கிடைக்கிறது என்று வைத்துக்கொள்வோம். இந்திய சட்டத்தின்படி, இதுபோன்ற ஆஃப்களிலிருந்து வரும் பணத்திற்கு 30% வரி (TDS) கொடுக்க வேண்டும். அதன்படி, ரூ.3 கோடியிலிருந்து 30% வரியாக ரூ.90 லட்சம் கழித்து, ரூ.2 கோடியே 10 லட்சம் உங்கள் வங்கி கணக்கிற்கு வரும்.
இதையடுத்து உங்கள் வருமான வரி கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். அந்த வருமானத்திற்கு மட்டும் உங்கள் வரி கணக்கிடப்பட்டால், ரூ.3 கோடிக்கு (புதிய வருமான வரி சட்டத்தின்படி) நீங்கள் ரூ.86,90,000 வரியாக செலுத்த வேண்டும்.
இதுமட்டுமின்றி, உங்கள் வருமானம் ரூ.50 லட்சத்திற்கு மேல் உள்ளதால் உங்கள் வரிக்கான துணைவரி (Surcharge) மற்றும் மேல்வரியை (Cess) நீங்கள் கட்ட வேண்டும். அதாவது 15% துணைவரியையும், மொத்த வரியில் 4% மேல்வரியையும் நீங்கள் கட்ட வேண்டும்.
துணைவரி – ரூ.86,90,000-லிருந்து 15% என்றால் ரூ.13,03,500.
அப்படியென்றால் உங்கள் வரி ரூ.86,90,000 + ரூ.13,03,500 = ரூ.99,93,500
இந்த பணத்தில் உங்கள் மேல்வரியை கணக்கிட்டால், ரூ.99,93,500-லிருந்து 4% என்றால் ரூ.3,99,740.
அப்படியென்றால் உங்களின் மொத்த வரி ரூ.1,03,93,240.
முதலில் உங்களுக்கு வரும் பணத்திலிருந்து TDS கழிக்கப்பட்டு, பின்பு வரிகள் கணக்கிடப்படும். இதையடுத்தே அந்த வரியில் TDS-யை கழித்த பிறகு, மீதம் உள்ள பணத்தை நீங்கள் கட்ட வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
இந்த கணக்கில், உங்களிடமிருந்து முதலே ரூ.90 லட்சம் TDS கழிக்கப்பட்டதால், நீங்கள் மீதம் உள்ள ரூ.13,93,240 கட்ட வேண்டும்.
அப்படியானால் உங்கள் வங்கி கணக்கிற்கு வரும் தொகை ரூ.1,96,06,760. அதாவது ரூ.1 கோடியே 96 லட்சத்து 6 ஆயிரத்து 760 உங்களுக்கு கிடைக்கும்.
இது புதிய வருமான வரி சட்டத்தின் மூலம் கணக்கிடப்பட்டுள்ளது. மேலும் இந்த பணத்தில் பழைய வருமான வரி சட்டத்தில் கழிக்கப்படும் 80C, 80D உள்ளிட்ட பிரிவுகள் மூலம் வரியை கழிக்கமுடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
April 17, 2025 4:04 PM IST

