Last Updated:
4 வயது குழந்தைகளுக்கு குளோர்பெனிரமைன் மெலேட் மற்றும் ஃபீனைலெஃப்ரின் ஹைட்ரோகுளோரைட்டின் கலவை உள்ள மருந்துகளை பயன்படுத்துவதை தடை செய்ய அந்த குழு பரிந்துரை செய்தது.
குறிப்பிட்ட இருமல் தடுப்பு மருந்துகளை 4 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பயன்படுத்துவதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
இருமலுக்கு தரப்படும் பெரும்பாலான மருந்துகளில் குளோர்பெனிரமைன் மெலேட் மற்றும் ஃபீனைலெஃப்ரின் ஹைட்ரோகுளோரைட்டின் கலவை பயன்படுத்தப்படுகின்றன. இது மட்டுமின்றி T-Minic சிரப், Ascoril காய்ச்சல் மருந்து, Wikoryl AF உள்பட குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் சளி, காய்ச்சல் மருந்துகளிலும் இந்த கலவைகள் சேர்க்கப்பட்டுள்ளன. கண்களில் நீர் வடிதல், மூக்கில் நீர் வடிதல் மற்றும் தும்மல் உள்ளிட்ட அறிகுறிகளுக்கு சிகிச்சை அளிப்பதிலும் மேற்கூறிய கலவை முக்கிய பங்காற்றி வருகிறது.
இந்த நிலையில், இதுகுறித்து மத்திய அரசு மற்றும் மருந்து தொழில்நுட்ப ஆலோசனை வாரியம் இணைந்து ஆய்வு மேற்கொண்டது. இதில், இருமல் மருந்து 4 வயதுக்குப்பட்ட குழந்தைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடும் என்பது தெரியவந்தது.
அதனால், 4 வயது குழந்தைகளுக்கு குளோர்பெனிரமைன் மெலேட் மற்றும் ஃபீனைலெஃப்ரின் ஹைட்ரோகுளோரைட்டின் கலவை உள்ள மருந்துகளை பயன்படுத்துவதை தடை செய்ய அந்த குழு பரிந்துரை செய்தது.
அதன்படி, குளோர்பெனிரமைன் மெலேட் மற்றும் ஃபீனைலெஃப்ரின் ஹைட்ரோகுளோரைட்டின் கலவை உள்ள மருந்துகளின் அட்டைகளில் 4 வயதுக்குப்பட்ட குழந்தைகள் பயன்படுத்தக்கூடாது என்ற எச்சரிக்கையை சேர்க்குமாறு மத்திய அரசு மருந்து நிறுவனங்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.
April 19, 2025 8:07 AM IST


