Last Updated:
மும்பை இந்தியன்ஸ் அணியில் ஜஸ்பிரித் பும்ரா, ட்ரெண்ட் போல்ட், வில் ஜாக்ஸ் ஆகியோர் மிகத் துல்லியமாக பந்துவீசி ஐதராபாத் பேட்ஸ்மேன்களை திணறடித்தனர்.
மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து தொடக்க வீரர்களாக ஹைதராபாத் அணியில் அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட் ஆகியோர் களம் இறங்கினர். இருவரும் பவர் பிளேயில் குறைந்தது 80 ரன்கள் அதிகமாக அடிக்கும் திறமை வாய்ந்தவர்கள். ஆனால் மும்பை அணியின் துல்லியமான பந்துவீச்சுக்கு முன்னால் இருவரும் ரன்கள் சேர்க்க திணறினர்.
28 பந்துகளை எதிர்கொண்ட அபிஷேக் சர்மா 7 பவுண்டரிகளுடன் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த இஷான் கிஷன் 2 ரன்னில் வெளியேறினார். ஒருநாள் போட்டிகளைப் போன்று விளையாடிய டிராவிஸ் ஹெட் 29 பந்துகளில் 28 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
நிதீஷ் குமார் ரெட்டி 19 ரன்களும் கிளாசன் 37 ரன்களும் எடுத்தனர். 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 162 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. இதையடுத்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்கியுள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணியில் ஜஸ்பிரித் பும்ரா, ட்ரெண்ட் போல்ட், வில் ஜாக்ஸ் ஆகியோர் மிகத் துல்லியமாக பந்துவீசி ஐதராபாத் பேட்ஸ்மேன்களை திணறடித்தனர்.
April 17, 2025 9:33 PM IST


