• Login
Wednesday, April 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

நடுவானில் திக்திக் சம்பவம் : கத்தி முனையில் விமானத்தை கடத்திய நபர் – சுட்டுக்கொன்ற பயணி

GenevaTimes by GenevaTimes
April 18, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
நடுவானில் திக்திக் சம்பவம் : கத்தி முனையில் விமானத்தை கடத்திய நபர் – சுட்டுக்கொன்ற பயணி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பெலிஸில் (Belize) சிறிய ரக பயணிகள் விமானத்தை கத்தி முனையில் கடத்திய நபரை, பயணி ஒருவர் நடுவானில் சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், மத்திய அமெரிக்கா (United States) நாடான பெலிஸின் கொரோசல் நகரத்திலிருந்து, சிறிய ரக விமானம் ஒன்று, சான் பெட்ரோ நகருக்கு புறப்பட்டுள்ளது. 


இந்த விமானத்தில் இரண்டு விமானிகள் மற்றும் 14 பயணிகள் உட்பட 16 பேர் பயணம் செய்துள்ளனர்.

நடுவானில் விமானம்

உள்ளூர் நேரப்படி காலை 8;30 மணியளவில், விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, 50 வயது மதிக்கத்தக்க நபர், கத்தியை காட்டி பயணிகள் மற்றும் விமானிகள் மிரட்டியுள்ளார்.

நடுவானில் திக்திக் சம்பவம் : கத்தி முனையில் விமானத்தை கடத்திய நபர் - சுட்டுக்கொன்ற பயணி | Us Man Tries To Hijack Flight Shot Dead In Mid Air

இந்த நாட்டிலிருந்து தன்னை வெளியே கொண்டு சென்று விடுமாறு விமானிகளை மிரட்டியுள்ளார். ஒரு கட்டத்தில் ஒரு விமானி மற்றும் 2 பயணிகளை கத்தியால் குத்தியுள்ளார். 


கத்தியால் குத்தப்பட்ட பயணி ஒருவர், தான் வைத்திருந்த துப்பாக்கியை வைத்து, விமானத்தை கடத்த முயன்ற நபரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்.

தீவிர சிகிச்சை

குண்டு பாய்ந்த அந்த நபர், விமானத்தில் சரிந்து விழுந்தார். ஏறத்தாழ 2 மணி நேரம் சீரற்ற முறையில் வட்டமிட்ட பிறகு, விமானம் பாதுகாப்பாக பிலிப் எஸ்டபிள்யூ கோல்ட்சன் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. 

நடுவானில் திக்திக் சம்பவம் : கத்தி முனையில் விமானத்தை கடத்திய நபர் - சுட்டுக்கொன்ற பயணி | Us Man Tries To Hijack Flight Shot Dead In Mid Air

கத்தியால் குத்தப்பட்ட விமானி மற்றும் 2 பயணிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். பயணி ஒருவருக்கு நுரையீரலில் காயம் ஏற்பட்டுள்ளதால் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார்.

முதற்கட்ட விசாரணையில், விமானத்தை கடத்த முயன்ற நபர், அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்த அகின்யிலா சா டெய்லர் என்பது தெரிய வந்துள்ளது. ஆனால் என்ன காரணத்திற்காக விமானத்தை கடத்த முயற்சி செய்தார் என விசாரணை நடைபெற்று வருகிறது. 

A knife-wielding man reportedly attempted to hijack a Tropicair flight in Belize this morning. The flight was met by a large emergency response upon landing in Belize City. We are closely following this story for updates. https://t.co/C2DbdxR0c9 pic.twitter.com/cGjPWgKAZv

— Flightradar24 (@flightradar24) April 17, 2025

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!  



Read More

Previous Post

நீங்கள் எதையாவது மறைக்க முயற்சிக்கிறீர்களா என்று அபிஃப் சிலாங்கூர் எம்பியிடம் கேட்கிறார் – Malaysiakini

Next Post

‘உங்கள் தேசத்தின் சிறுபான்மையினர் நலனை பேணவும்’ – வங்கதேசத்துக்கு இந்தியா பதிலடி | Protect rights of your own minorities: India raps Bangladesh over Bengal riots remark

Next Post
‘உங்கள் தேசத்தின் சிறுபான்மையினர் நலனை பேணவும்’ – வங்கதேசத்துக்கு இந்தியா பதிலடி | Protect rights of your own minorities: India raps Bangladesh over Bengal riots remark

‘உங்கள் தேசத்தின் சிறுபான்மையினர் நலனை பேணவும்’ - வங்கதேசத்துக்கு இந்தியா பதிலடி | Protect rights of your own minorities: India raps Bangladesh over Bengal riots remark

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin