• Login
Thursday, April 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

காசா மீது இஸ்ரேல் தாக்குதலின் கோர முகத்தை உலகிற்கு வெளிச்சம் காட்டிய சிறுவனின் புகைப்படம் – குவியும் விருது | World Press Photo

GenevaTimes by GenevaTimes
April 18, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
காசா மீது இஸ்ரேல் தாக்குதலின் கோர முகத்தை உலகிற்கு வெளிச்சம் காட்டிய சிறுவனின் புகைப்படம் – குவியும் விருது | World Press Photo
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:April 18, 2025 11:45 AM IST

இஸ்ரேலின் கடுமையான தாக்குதலுக்கு அஞ்சி, காசாவிலிருந்து தோஹாவிற்கு இடம் பெயர்ந்த எலூஃப், தோஹாவில் தஞ்சம் அடைந்துள்ள கை கால்களை இழந்தவர்களுக்கு சேவை செய்து வருகிறார்.

News18News18
News18

இஸ்ரேல் தாக்குதலால் பாதிக்கப்பட்டு இரண்டு கைகளையும் இழந்த சிறுவனின் புகைப்படத்திற்கு World Press Photo விருது கிடைத்துள்ளது.. இந்த புகைப்படத்தை எடுத்த பெண்ணுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

உடல் முழுவதும் தீக்காயங்களுடன், தனது இரண்டு கைகளையும் நீட்டிக்கொண்டு முகம் முழுக்க பயத்துடன் ஓடிவரும் சிறுமியின் படம் 19 ஆண்டுகளாக நடந்து வந்த ஒரு பெரும்போரை நிறுத்தியது. அமெரிக்க ஆதரவுடன் வடக்கு வியட்நாமை எதிர்த்து, தெற்கு வியட்நாம் போரிட்ட காலத்தில் நிக் உட் என்ற புகைப்பட பத்திரிகையாளர் ஒரு படம் எடுத்தார். “நாபாம் சிறுமி” என்ற அந்த பிரபல புகைப்படம் போரின் கோர முகத்தை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியது.. இந்த புகைப்படத்திற்காக நிக் உட்டிற்கு பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டன.

இதே போன்ற ஒரு புகைப்படத்தை காசாவில் எடுத்து World Press Photo விருது பெற்றுள்ளார் சமர் அபு எலூஃப் என்ற பெண். New york பத்திரிகைக்காக எலூஃப் எடுத்த புகைப்படத்திற்கு மிக உயரிய விருதான World Press Photo-வின் முதல் பரிசு கிடைத்துள்ளது. எலூஃபின் புகைப்படத்தில் காணப்படுவது மஹ்மூத் அஜ்ஜூர் என்ற 9 வயது சிறுவன்..

காசா மீது கடந்த ஆண்டு மார்ச் மாதம் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காயமடைந்த சிறுவன் தான் இந்த மஹ்மூத் அஜ்ஜூர். தாக்குதலில் படுகாயமடைந்த சிறுவன் உடனடியாக தோஹா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான்… அங்கு அவனது இரு கைகளும் அகற்றப்பட்டன.. தற்போது அஜ்ஜூர் தனது குடும்பத்தினருடன் தோஹாவில் வசித்து வருகிறான்.. அவர்கள் வசித்து வரும் சிறிய வீட்டில் வைத்து தான் எலூஃப், விருது பெற்ற அந்த புகைப்படத்தை எடுத்துள்ளார்.

இஸ்ரேலின் கடுமையான தாக்குதலுக்கு அஞ்சி, காசாவிலிருந்து தோஹாவிற்கு இடம் பெயர்ந்த எலூஃப், தோஹாவில் தஞ்சம் அடைந்துள்ள கை கால்களை இழந்தவர்களுக்கு சேவை செய்து வருகிறார். மறுபுறம் New york பத்திரிகைக்காகவும் எலூஃப் பணிபுரிந்து வருகிறார்…இரு கைகளும் அகற்றப்பட்டு, ஏக்கத்தோடு காணப்படும் அஜ்ஜூரின் புகைப்படம் போரின் கொடூரத்தை வார்த்தைகளே இல்லாமல் உணர்த்துவதாக உள்ளது.

காசா மீது கடந்த 3 ஆண்டுகளாக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 51 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.. ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களின் ஏராளமானோர் உடல் உறுப்புகளை இழந்துள்ளதால், மிகப்பெரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.. இது மட்டுமல்லாமல் உலகிலேயே அதிக அளவிலான குழந்தை மாற்றுத்திறனாளிகள் காசாவில் உருவாகி வருவதாக ஐக்கிய நாடுகள் சபை கவலை தெரிவித்துள்ளது.

First Published :

April 18, 2025 11:45 AM IST

தமிழ் செய்திகள்/உலகம்/

காசா மீது இஸ்ரேல் தாக்குதலின் கோரமுகத்தை உலகிற்கு வெளிச்சம் காட்டிய சிறுவனின் புகைப்படம் – குவியும் விருது | World Press Photo

Read More

Previous Post

3 ஆண்டுகளில் ஜொ்மனி, ஜப்பானைவிட இந்திய பொருளாதாரம் வளா்ச்சி அடையும்: நீதி ஆயோக்

Next Post

நீங்கள் எதையாவது மறைக்க முயற்சிக்கிறீர்களா என்று அபிஃப் சிலாங்கூர் எம்பியிடம் கேட்கிறார் – Malaysiakini

Next Post
நீங்கள் எதையாவது மறைக்க முயற்சிக்கிறீர்களா என்று அபிஃப் சிலாங்கூர் எம்பியிடம் கேட்கிறார் – Malaysiakini

நீங்கள் எதையாவது மறைக்க முயற்சிக்கிறீர்களா என்று அபிஃப் சிலாங்கூர் எம்பியிடம் கேட்கிறார் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin