Last Updated:
ஒருவர் என்னை ஆதரித்து மற்றவர்களிடையே பேசினாலும், தனியாக நான் இருந்தபோது என் அருகில் அமர்ந்து என்னுடைய புகைப்படங்களை கேட்டார் என அனயா கருத்து.
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் பயிற்சியாளருமான சஞ்சய் பாங்கரின் மகள் அனயா கிரிக்கெட் வீரர்கள் மீது பரபரப்பு குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
சஞ்சய் பாங்கரின் மகன் ஆர்யன் கடந்த சில தினங்களுக்கு முன்பு, தான் பெண்ணாக மாறவேண்டும் என்று ஹார்மோன் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டார்.
அவரின் இந்த சிகிச்சை குறித்து பல சலசலப்புகள் எழுந்த நிலையில், அந்த காலத்தில் நடந்தவற்றை ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
சிகிச்சைக்கு பிறகு அனயா என பெயர் மாற்றிக்கொண்ட அவர், இதுகுறித்து கூறும்போது, “எனக்கு 8 வயதிலிருந்தே நான் ஒரு பெண்ணாக இருக்க வேண்டும் என்று தான் விருப்பப்பட்டேன். என்னுடைய தாயின் உடைகளை எடுத்து உடுத்திக்கொள்வேன். மேலும் கண்ணாடியை பார்த்து ‘நான் ஒரு பெண்ணாக இருக்க வேண்டும்’ என்றே கூறி வந்தேன்.
தற்போது ஜெய்ஸ்வால், சர்ஃப்ராஸ் கான் உள்ளிட்டோருடன் கிரிக்கெட் விளையாடியுள்ளேன். ஆனால் அனைவரிடமிருந்தும் நான் யார் என்று மறைக்க வேண்டியிருந்தது. ஏனென்றால் கிரிக்கெட்டில் ஒரு தீங்கு விளைவிக்கும் ஆணாதிக்கம் உள்ளது.
மேலும் நான் இதற்கு சிகிச்சை எடுத்துக்கொண்ட பிறகு எனக்கு சிலர் ஆதரவாக இருந்தார்கள். ஆனால் சிலர் என்னை வன்கொடுமையும் கொடுத்தார்கள். சில கிரிக்கெட்டர்கள் அவர்களின் நிர்வாண புகைப்படங்களையும் எனக்கு அனுப்பியுள்ளனர்.
ஒருவர் என்னை ஆதரித்து மற்றவர்களிடையே பேசினாலும், தனியாக நான் இருந்தபோது என் அருகில் அமர்ந்து என்னுடைய புகைப்படங்களை கேட்டார். மேலும் ஒரு மூத்த கிரிக்கெட்டரிடம் எனது நிலைமையை எடுத்து கூறினேன். மறுகனமே அவர் என்னுடன் காரில் வா. நாம் ஒன்றாக இருக்கலாம் என கேட்டார்” என தெரிவித்தார்.
இதையும் படிக்க: வான்கடேவில் வரலாறு படைத்த ரோகித் சர்மா..! ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சாதனை
அனயா சிறுவயதிலிருந்தே தனது தந்தையைப்போல கிரிக்கெட்டர் ஆக வேண்டும் என முயற்சி செய்துவந்தார். ஆனால் கடந்த 2023ஆம் ஆண்டு ‘சர்வதேச மகளிர் போட்டிகளில் திருநங்கைகள் பங்கேற்க கூடாது’ என தடை விதித்தது. ஆகையால் அனயாவின் கனவும் அத்துடன் முடிந்துபோனது.
இதுகுறித்து அனயா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வருத்தம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது அனயா இங்கிலாந்தில் மான்செஸ்டரில் வசித்துக்கொண்டு இருக்கிறார்.
April 18, 2025 10:43 AM IST


