Last Updated:
இன்ஃபோசிஸ் 2026-ம் நிதியாண்டில் 20,000 பேரை வேலைக்கு சேர்க்க திட்டமிட்டுள்ளது.
பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸ் 2026-ம் நிதியாண்டில் புதிதாக 20,000 பேரை வேலையில் சேர்க்க உள்ளது.
உலகளாவிய பொருளாதார சமநிலையற்ற சூழலை காரணம் காட்டி இந்தியாவின் முன்னணி டெக் நிறுவனங்களான டிசிஎஸ் மற்றும் விப்ரோ ஆகியவை சம்பள உயர்வை நிறுத்தி வைத்துள்ளன. இந்த சூழலில் இன்ஃபோசிஸ் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு சம்பளத்தை உயர்த்தி அளிக்க திட்டமிட்டுள்ளது.
இன்ஃபோசிஸ் நிறுவனம் 2025-ம் நிதியாண்டில் மட்டும் கல்லூரி படித்து முடித்த இளைஞர்கள் 20,000 பேரை பணியில் சேர்த்துள்ளது. இந்த சூழலில் 2026-ம் நிதியாண்டின் திட்டங்கள் குறித்து அந்த நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியான ஜெயேஷ் சங்ராஜ்கா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அதில் இன்ஃபோசிஸ் நிறுவனம் தங்கள் பணியாளர்களில் ஒரு பிரிவினருக்கு கடந்த ஜனவரி மாதமே சம்பள உயர்வை அளித்துவிட்டதாகவும், மற்றொரு தரப்பினருக்கு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் சம்பள உயர்வுக்கான பணிகள் தொடங்கியிருப்பதாகவும் கூறியிருக்கிறார். மேலும் புதிதாக 20,000 பேரை நிறுவனத்தில் பணியில் அமர்த்தவும் முடிவெடுத்துள்ளதாக கூறினார்.
இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் இதுவரை பணியாற்றுவோரின் எண்ணிக்கை 3,23,578 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் இருந்து வெளியேறியவர்களின் விகிதம் 13.7-ல் இருந்து 14.1 ஆக உயர்ந்துள்ளது.
April 18, 2025 7:33 AM IST


