• Login
Thursday, April 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ஒரு பல்லியின் விலை ரூ.60 லட்சம்.. விண்வெளி ஆராய்ச்சியில் பயன்படும் உயிரினங்கள் கடத்தல்.. அசாமில் அதிர்ச்சி சம்பவம்!

GenevaTimes by GenevaTimes
April 17, 2025
in இந்தியா
Reading Time: 1 min read
0
ஒரு பல்லியின் விலை ரூ.60 லட்சம்.. விண்வெளி ஆராய்ச்சியில் பயன்படும் உயிரினங்கள் கடத்தல்.. அசாமில் அதிர்ச்சி சம்பவம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இந்த பல்லி சில ஆசிய நாடுகளில் செழிப்பின் அடையாளமாகக் கருதப்படுகிறது. டோக் கெக்கோ மருத்துவ குணங்களைக் கொண்டிருப்பதாக சிலர் நம்புகிறார்கள். டோக் கெக்கோ ஆனது சீனாவில் ஆஸ்துமா மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு மருந்தாக பிரபலமாகப் பயன்படுத்தப்படுகிறது. இது விண்வெளி ஆராய்ச்சியிலும் பயன்படுத்தப்படுகிறது. அதனால்தான் அதன் தேவை மிக அதிகமாக உள்ளது.

திப்ருகரில் சில குற்றவாளிகளால் டோக்காய் கெக்கோ பல்லி கடத்துவது தொடர்பாக தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில், அசாம் காவல்துறையின் சிறப்புப் பணிப் படை (STF) குழு, ஏப்ரல் 10 ஆம் தேதி திப்ருகரை நோக்கிச் சென்றது. இதனையடுத்து அடுத்த நாள் அதாவது ஏப்ரல் 11 ஆம் தேதி திப்ருகரை அடைந்ததும், கடத்தல்காரர்கள் டோக்காய் கெக்கோவை திப்ருகரின் மாவட்டத்தில் உள்ள மோகன்பரி பகுதிக்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளதாகக் குழுவுக்குத் தகவல் கிடைத்தது.

இந்த சம்பவம் குறித்த தகவல்களைப் பகிர்ந்து கொண்ட சிறப்புப் படைக் குழு, திப்ருகார் மாவட்ட காவல்துறை, வனவிலங்கு நீதி ஆணையம் மற்றும் புலனாய்வுத் துறையின் ஒத்துழைப்பு, ஆதரவு மற்றும் சரியான நேரத்தில் வழங்கப்பட்ட தகவல்களால் குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கைது செய்ய முடிந்தது என்று கூறியது. கைது செய்யப்பட்ட குற்றவாளிகளான தேபாஷிஸ் தோஹுதியா (34), மனாஷ் தோஹுதியா (28) மற்றும் தீபங்கர் கர்ஃபாலியா (40) ஆகியோர் விசாரணையின் போது இந்த பல்லிகளை தலா ரூ.60 லட்சத்திற்கு விற்க திட்டமிட்டிருந்ததாக ஒப்புக்கொண்டனர்.

மோகன்பாரி டினியாலியில் உள்ள சன் ஃபீஸ்ட் தாபாவில் மூன்று சந்தேகத்திற்குரிய நபர்களை போலீசார் கண்டறிந்தனர். அதில் 2 பேர் AS-23W-5506 என்ற நம்பரை கொண்ட வெள்ளை நிற காரில் தாபாவிற்கு வந்தனர். சிறிது நேரத்திற்குப் பிறகு AS-06AF-0276 என்ற நம்பரை கொண்ட பைக்கில் ஒருவர் வந்தார். பிறகு இவர்கள் மூவரும் சேந்து தபாவிற்குள் நுழைந்தனர். பிறகு காரில் வந்த 2 பேரில் ஒருவர், கார் நிறுத்தப்பட்டிருந்த இடத்திற்கு வந்து, காரை திறந்து, அதில் உள்ள சிகப்பு நிற பேக்-ஐ எடுத்து மீண்டும் தபாவிற்குள் நுழைந்தார்.

இந்த நேரத்தில், சிறப்புப் படை குழு உடனடியாக நடவடிக்கை எடுத்து மூவரையும் பிடித்தது. மேலும் சிகப்பு நிற பேக் இல் இருந்த 11 அரிய வகை டோக்கே கெக்கோ பல்லிகளை போலீசார் கண்டுபிடித்தனர். தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கறுப்புச் சந்தையில் இவற்றின் தேவை அதிகமாக இருப்பதே இந்தக் கடத்தலுக்குக் காரணம். அங்கு இந்தப் பல்லிகள் பாரம்பரிய மருந்துகள் மற்றும் ‘தந்திர-மந்திரம்’ ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகின்றன.

அழிந்து வரும் டோக்கே கெக்கோ பல்லியின் விற்பனை 1972 ஆம் ஆண்டு வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. அதை மீறி இந்த அறிய வகை பல்லிகளை கடத்தினால், அந்த கடத்தலில் தொடர்புடையவர்களுக்கு அதிகபட்ச தண்டனையாக ஏழு ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்படும். இருப்பினும், வடகிழக்கு மாநிலங்களில் அதன் கடத்தல் மற்றும் விற்பனை தொடர்கிறது.

அசாம் மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தின் ஒரு சில பகுதிகளில் மட்டுமே காணப்படும் இந்த இனங்கள், தென்கிழக்கு ஆசியாவில் கறுப்புச் சந்தையில் அவற்றுக்கான தேவை அதிகமாக உள்ளது. இது ஆசியா மற்றும் பசிபிக் பகுதிகளில் காணப்படும் ஒரு அரிய பல்லி இனமாகும், மேலும் இது வடகிழக்கு இந்தியா, பூட்டான், நேபாளம், பங்களாதேஷ், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், மலேசியா மற்றும் இந்தோனேசியா மற்றும் மேற்கு நியூ கினியா உள்ளிட்ட ஆசியா முழுவதும் பரவலாக உள்ளது.

First Published :

April 17, 2025 6:30 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

ஒரு பல்லியின் விலை ரூ.60 லட்சம்.. விண்வெளி ஆராய்ச்சியில் பயன்படும் உயிரினங்கள் கடத்தல்.. அசாமில் அதிர்ச்சி சம்பவம்!

Read More

Previous Post

யாழ். மாவட்டத்தில் எச்சரிக்கை மட்டத்துக்கு அதிகரித்த வெப்பநிலை

Next Post

ரீல்ஸ் மோகம்…கங்கையில் அடித்து செல்லப்பட்ட பெண்; அம்மா… அம்மா… என கதறிய சிறுமி | Makkal Osai

Next Post
ரீல்ஸ் மோகம்…கங்கையில் அடித்து செல்லப்பட்ட பெண்; அம்மா… அம்மா… என கதறிய சிறுமி | Makkal Osai

ரீல்ஸ் மோகம்...கங்கையில் அடித்து செல்லப்பட்ட பெண்; அம்மா... அம்மா... என கதறிய சிறுமி | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin