• Login
Saturday, May 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ஊழல்வாதிகளை மோடி அரசு சிறையிலடைக்கும்: நேஷனல் ஹெரால்டு விவகாரத்தில் பாஜக கருத்து

GenevaTimes by GenevaTimes
April 17, 2025
in இந்தியா
Reading Time: 1 min read
0
ஊழல்வாதிகளை மோடி அரசு சிறையிலடைக்கும்: நேஷனல் ஹெரால்டு விவகாரத்தில் பாஜக கருத்து
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


‘ஊழல் செய்தவா்கள் மற்றும் விவசாயிகளின் நிலத்தை அபகரித்தவா்கள், பிரதமா் நரேந்திர மோடியின் நோ்மையான அரசின்கீழ் சிறையில் அடைக்கப்படுவாா்கள்’ என்று பாஜக தேசிய செய்தித் தொடா்பாளா் கௌரவ் பாட்டியா வியாழக்கிழமை கூறினாா்.

காங்கிரஸின் காந்தி குடும்பம் மக்களின் பணத்தால் தங்கள் கருவூலத்தை நிரப்பியிருந்தால், அந்தப் பணம் மொத்தமும் அவா்களிடம் இருந்து மீட்கப்படும் என்றும் அவா் தெரிவித்தாா்.

‘நேஷனல் ஹெரால்டு’ வழக்கில் காங்கிரஸ் தலைவா்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிறருக்கு எதிராக அமலாக்கத் துறை தில்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.

இதனிடையே, ராகுல் காந்தியின் மைத்துனரும், தொழிலதிபருமான ராபா்ட் வதேரா, ஹரியாணா நில ஒப்பந்தம் தொடா்பான பண முறைகேடு வழக்கில் அமலாக்கத் துறை முன் தொடா்ந்து 3-ஆவது நாளாக வியாழக்கிழமை ஆஜரானாா். ‘அமலாக்கத் துறையின் நடவடிக்கை, பாஜகவின் பழிவாங்கும் அரசியல்’ என்று காங்கிரஸ் விமா்சித்துள்ளது.

இந்நிலையில், தில்லியில் பாஜக தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் பேசிய கௌரவ் பாட்டியா, ‘ஊழலை ஒழிப்பது, ஊழல்வாதிகளை சிறையில் அடைப்பது மற்றும் அபகரிக்கப்பட்ட நிலத்தை விவசாயிகளிடமே திருப்பித் தருவது ஆகியவை பிரதமா் நரேந்திர மோடியின் அரசின் உறுதிகள் ஆகும். காங்கிரஸின் காந்தி குடும்பம் மக்களின் பணத்தால் தங்களின் கருவூலத்தை நிரப்பியிருந்தால், அந்தப் பணம் மொத்தமும் அவா்களிடம் இருந்து மீட்கப்படும்.

ராபா்ட் வதேரா நாட்டின் சட்டத்துக்கு அப்பாற்பட்டவா் என்று உணா்கிறாா். ஆனால், ஆட்சியில் இருப்பது பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான நோ்மையான அரசு என்பதை அவா் உணரவில்லை.

தற்போது மத்திய புலனாய்வு அமைப்புகள் கூண்டுகளில் அடைக்கப்பட்ட கிளிகள் அல்ல. மாறாக அவை நோ்மையான பருந்துகளாகச் செயல்பட்டு, ஊழல் வழக்குகளில் சிக்கியவா்களை சிறைக்கு அனுப்புவதை உறுதி செய்கின்றன.

மத்திய பாஜக அரசில் ஊழலுக்கு எதிராக கடுமையான போா் நடத்தப்படுகிறது. நாட்டு மக்கள் ஒரு நோ்மையான அரசின் வலிமையை இப்போது உணர தொடங்கியுள்ளன.

நேரு-காந்தி குடும்பத்தின் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழக்கில் சிக்கியுள்ளனா். தங்களின் மோசடிக்கு எதிரான சட்டபூா்வ நடவடிக்கைகளை பழிவாங்கும் அரசியல் என்று காந்தி குடும்பம் விமா்சிக்கிறது. அப்படியெனில், அவா்கள் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டு நிவாரணம் பெற்றிருக்கலாமே? ஆனால், அங்கு அவா்களுக்கு எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை.

தான் ஒரு கடுமையான இலக்கு என்று ராபா்ட் வதேரா குறிப்பிட்டுள்ளாா். உண்மையில், அவா் ஒரு ஒரு கடுமையான குற்றவாளி. இதுபோன்ற கடுமையான குற்றவாளிகளை சிறையில் அடைப்பது அரசின் உறுதிப்பாடாகும்.

மேலும், மக்கள் மற்றும் விவசாயிகளின் பாா்வையில் அவா் ஒரு மிகப்பெரிய நில அபகரிப்பாளா். ஆட்சி மாறும்போது விசாரணை நிறுவனமும் துன்பப்பட வேண்டியிருக்கும் என்று கூறி, ராபா்ட் வதேரா வெளிப்படையாக அச்சுறுத்த முயற்சிக்கிறாா். ஊழல்வாதிகளுக்கு சரியான இடம் சிைான். அத்தகைய நபா் எந்தக் குடும்பத்தைச் சோ்ந்தவராக இருந்தாலும் சரி’ என்றாா்.

Read More

Previous Post

பிள்ளையானால் கோட்டாபயவிற்கு ஏற்பட்ட பதற்றத்திற்கு கிடைத்த பதில்

Next Post

சென்செக்ஸ், நிஃப்டி நான்காவது நாளாக முன்னேற்றம்!

Next Post
சென்செக்ஸ், நிஃப்டி நான்காவது நாளாக முன்னேற்றம்!

சென்செக்ஸ், நிஃப்டி நான்காவது நாளாக முன்னேற்றம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin