Last Updated:
பென்ஷன் பிரீமியர் மல்டிகேப் ஃபண்ட் என்பது PNB MetLife ஸ்மார்ட் இன்வெஸ்ட் பென்ஷன் திட்டத்துடன் கிடைக்கிறது. இந்தத் திட்டமானது ஓய்வு காலத்திற்கு ஒரு பெரிய அளவிலான தொகையை சேமிக்கும் அதே சமயத்தில், ஆயுள் காப்பீட்டையும் வழங்கி, எதிர்பாராத சூழ்நிலைகளின்போது, தங்களுடைய குடும்பத்திற்கு பொருளாதார பாதுகாப்பையும் வழங்குகிறது.
PNB MetLife இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் இன்று PNB MetLife பென்ஷன் பிரீமியர் மல்டிகேப் ஃபண்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்தத் திட்டத்தை நிறுவனம் யூனிட்-லிங்க்டு இன்சூரன்ஸ் திட்டங்களின் கீழ் வழங்குகிறது. கஸ்டமர்கள் தங்களுடைய ஓய்வு கால சேமிப்புகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளும் வகையில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பாலிசி பஜார் உடன் இணைந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்தத் திட்டமானது 2025 ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 15ஆம் தேதி வரை சப்ஸ்க்ரிப்ஷன் செய்வதற்கு கிடைக்கிறது. இந்தத் திட்டத்தின் ஆரம்ப நிகர சொத்து மதிப்பு 10 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு தற்போதைய மார்க்கெட் மதிப்பின் அடிப்படையில் மாற்றம் செய்யப்படும்.
பென்ஷன் பிரீமியர் மல்டிகேப் ஃபண்ட் என்பது PNB MetLife ஸ்மார்ட் இன்வெஸ்ட் பென்ஷன் திட்டத்துடன் கிடைக்கிறது. இந்தத் திட்டமானது ஓய்வு காலத்திற்கு ஒரு பெரிய அளவிலான தொகையை சேமிக்கும் அதே சமயத்தில், ஆயுள் காப்பீட்டையும் வழங்கி, எதிர்பாராத சூழ்நிலைகளின்போது, தங்களுடைய குடும்பத்திற்கு பொருளாதார பாதுகாப்பையும் வழங்குகிறது.
PNB MetLife பென்ஷன் பிரீமியர் மல்டிகேப் ஃபண்ட் திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:
- பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்ய அனுமதிக்கிறது.
- முறையான முதலீட்டு யுக்தி பயன்படுத்தப்படுகிறது.
இது குறித்து பேசிய PNB MetLife நிறுவனத்தின் சீஃப் இன்வெஸ்ட்மென்ட் அதிகாரியான சஞ்சய் குமார், “ஓய்வுகால திட்டமிடல் என்பது பணத்தை சேமிப்பது மட்டும் இல்லை, நீண்ட கால பொருளாதார சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதற்கு புத்திசாலித்தனமாக முதலீடு செய்வதும் இதில் அடங்கும். PNB MetLife பென்ஷன் பிரீமியர் மல்டிகேப் ஃபண்ட் மூலமாக பல முதலீட்டு யுக்திகளை செயல்படுத்த உள்ளோம். இதன் மூலமாக கஸ்டமர்கள் தங்களுடைய செல்வத்தை அதிகரிப்பதற்கான வாய்ப்பைப் பெறுகிறார்கள். பாலிசி பஜார் உடனான எங்களுடைய இந்த பார்ட்னர்ஷிப் மூலம் அனைத்து செயல்முறைகளும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு, ஓய்வுகால திட்டமிடலை எளிமையானதாக மாற்றுகிறது” என தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: Jio Hotstar | ஐபிஎல் காரணமாக உலகின் மூன்றாவது பெரிய ஓடிடி தளமாக மாறியுள்ள ஜியோ ஹாட்ஸ்டார்…!
மேலும், பாலிசி பஜார்.com-ஐ சேர்ந்த சீஃப் பிசினஸ் அதிகாரியான விவேக் ஜெயின் அவர்கள் கூறுகையில், “இந்தியாவில் வழக்கமாக ஓய்வுகால திட்டமிடல் என்பது தனிநபர் சேமிப்பு அல்லது குடும்பத்தினரின் ஆதரவைப் பொறுத்தே அமைகிறது. எனினும், இந்த நிலை தற்போது மாறிக்கொண்டு வருகிறது. இந்த மாற்றத்தை ஆதரிக்கும் வகையில் பாலிசி பஜார் PNB MetLife உடன் இணைந்து புத்திசாலித்தனமான பென்ஷன் திட்டத்தை அறிமுகப்படுத்தி செல்வ வளத்தை அதிகப்படுத்துவதற்கு வடிவமைக்கப்பட்டுள்ளோம். தனி நபர்களின் எதிர்காலத்தை பாதுகாப்பாக அமைப்பதற்கு உதவக்கூடிய எங்களுடைய இந்த முயற்சியை நினைத்து நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம்” என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க: திருமணமான பெண்களின் சொத்துரிமை சட்டம் என்றால் என்ன…? அவசியம் தெரிஞ்சுக்கோங்க…
PNB MetLife பென்ஷன் பிரீமியர் மல்டிகேப் ஃபண்ட் மார்ச் 2018ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து 15.9% என்ற ஆண்டுவாரியான வளர்ச்சி விகிதத்தை வழங்கி வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் இந்த நிதியானது, ஓராண்டுக்கு 20.0 சதவீதம் என ஆண்டுவாரியான ரிட்டனை வழங்கி வருகிறது.
April 17, 2025 5:48 PM IST


