பிரிவு 80C -ன் கீழ் திருப்பி செலுத்தும் முதல் தொகைக்கான வரிப் பலன்:- பிரிவு 80C -ன் கீழ் உங்களுடைய ஹோம் லோனுக்காக நீங்கள் திருப்பி செலுத்தும் முதல் தொகையில் இருந்து 1.5 லட்சம் ரூபாய் வரை ஒரு வருடத்திற்கு டிடக்ஷன்களை கிளைம் செய்து கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல் இந்த பிரிவு PPF, EPF, லைஃப் இன்சூரன்ஸ் பிரீமியம்கள் போன்றவற்றிற்கும் பலன் தருகிறது.
இதற்கு தகுதி பெற:
நீங்கள் வீட்டை வாங்கிய 5 வருடத்திற்குள் அதனை யாரிடமும் விற்பனை செய்திருக்கக் கூடாது. நீங்கள் கடன் வாங்கிய நிதி நிறுவனம் அங்கீகரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.
பிரிவு 24(b) -ன் கீழ் நீங்கள் செலுத்தும் வட்டி பணத்திற்கு உரிய வரி பலன்:-
இந்த பிரிவின் கீழ் உங்கள் ஹோம் லோன் EMI-ல் உள்ள வட்டி தொகைக்கு ஒரு வருடத்திற்கு 2 லட்சம் ரூபாய் வரை தனியாக டிடக்ஷனை கிளைம் செய்யலாம். ஆனால் வீட்டை வாடகைக்கு விடாமல் நீங்கள் அங்கு வசித்தால் மட்டுமே இந்த பிரிவை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
*வீட்டு கட்டுமானத்தை நீங்கள் 5 வருடத்திற்குள் முடித்திருக்க வேண்டும்.
*கடன் வழங்குனரிடமிருந்து சரியான வட்டி சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும்.
கூடுதல் வரி பலன்கள்:-
*ஒருவேளை உங்களுடைய ஹோம் லோனை ஏப்ரல் 1, 2016 மற்றும் மார்ச் 31, 2017க்குள் பெற்றிருந்தால் மற்றும் உங்கள் வீட்டின் மதிப்பு 50 லட்ச ரூபாய்க்கு உள்ளாக இருந்தால் பிரிவு 80EE -ன் கீழ் கூடுதலாக 50,000 ரூபாயை கிளைம் செய்யலாம்.
*மேலும் ஏப்ரல் 1, 2019 மற்றும் மார்ச் 31, 2022 -க்குள் உங்களுடைய ஹோம் லோன் அங்கீகரிக்கப்பட்டிருந்தால் மற்றும் உங்கள் வீட்டின் மதிப்பு 40 லட்ச ரூபாய்க்குள் இருந்தால் பிரிவு 80EEA -ன் கீழ் 1.5 லட்சம் ரூபாயை கிளைம் செய்யலாம்.
ஜாயிண்ட் ஹோம் லோன்கள்:
ஒருவேளை நீங்கள் ஜாயிண்ட் ஹோம் லோன் எடுத்திருக்கும் பட்சத்தில் முதல் தொகைக்கு பிரிவு 80C -ன் கீழ் 1.5 லட்சம் வரையிலும், பிரிவு 24(b) -ன் கீழ் வட்டி தொகைக்கு 2 லட்சம் ரூபாய் வரையிலும் கிளைம் செய்யலாம்.
வீட்டிற்கான கட்டுமானம் நடந்து வரும் பட்சத்தில்:
ஒருவேளை நீங்கள் இன்னும் வீட்டை முழுமையாக கட்டி முடிக்காமல் அதற்கான கட்டுமான வேலைகளில் ஈடுபட்டு வந்தால் அது உங்களுக்கு சொந்தமாகும் வரை பிரிவு 24(b) -ன் கீழ் வட்டி தொகைக்கு வழங்கப்படும் டிடக்ஷன்களை கிளைம் செய்ய முடியாது. ஆனால் வீட்டை கட்டுவதற்கு முன்பு கிடைக்கும் வட்டி பலன்களை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். கட்டுமானத்தின் போது நீங்கள் செலுத்திய வட்டியை உங்களுக்கு சொந்தமான பிறகு 5 இன்ஸ்டால்மெண்ட்களில் அதற்கான வட்டியை கிளைம் செய்யலாம்.
ஹோம் லோன் என்பது ஒரு சொத்தை உங்களுக்கு சொந்தமாக்கிக் கொள்ள உதவுவது மட்டுமல்லாமல், வரி பலன்களையும் தரக்கூடிய ஒரு அற்புதமான கருவியாக அமைகிறது. சரியான திட்டமிடல் மற்றும் ஆவணங்களை பயன்படுத்தி வருமான வரி சட்டத்தில் உள்ள பிரிவுகள் 80C, 24(b), 80EE மற்றும் 80EEA ஆகியவற்றை பயன்படுத்தி டிடக்ஷன்களை கிளைம் செய்து பயன்பெறுங்கள்.
April 17, 2025 8:05 PM IST

