எப்படி இருந்த நான்; இப்படி ஆயிட்டேன்
பரஸ்பர வரிக்கு பிறகு, உலக சந்தைகள் மிகவும் அடிவாங்கியது. ட்ரம்பின் வரி அறிவிப்பின் எதிரொலியாக அமெரிக்க பொருளாதாரமும் தாக்கத்தை அனுபவித்தது. இதற்கு நல்ல உதாரணம், அமெரிக்கா பங்குச்சந்தையின் கடும் சரிவு.
ஆரம்பத்தில், சீனா பதிலடியாக வரி விதித்தபோது, அதிரடியாக வரி விகிதத்தை மேலும் உயர்த்தி வந்தார் ட்ரம்ப். ஆனால், இப்போதும் வரி விகிதத்தை உயர்த்தினாலும், முன்னாள் இருந்த முறுக்கு ட்ரம்ப்பிடம் இப்போது இல்லை.
காரணம், அவர் சீனா எப்படியாவது பேச்சுவார்த்தைக்கு முன்வரும் என்று முன்பு நினைத்திருந்தார். ஆனால், சீனா கொஞ்சம்கூட அசைந்து கொடுக்கவில்லை.
இதன் விளைவாக, ட்ரம்ப் தொடர்ந்து “சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்’ என்று தொடர்ந்து வெள்ளைக்கொடி காட்டி வந்தார். ஆனால், சீனா பக்கத்தில் இருந்து எந்த அசைவும் இல்லை.

அதற்கு பதிலாக, சீனா அமெரிக்காவிற்கு எதிராக பிற நாடுகளை திருப்ப காய்களை நகர்த்தி வருகிறது. இதற்கு ஆஸ்திரேலிய உடனடியாக ‘நோ’ சொல்லிவிட்டது.
சீனாவின் தூதிற்கு இந்தியா இன்னும் வாயை திறக்கவில்லை.
ஆசிய குடும்பங்களே…
இந்த நிலையில், நேற்று மலேசியாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சீன அதிபர் ஜின் பிங், “நாடுகளுக்கு இடையே உருவாகி உள்ள அரசியல் பிரிவினைவாதம் மற்றும் அரசியல் பிரச்னைகளை சரிசெய்ய சீனா மற்றும் மலேசியா இணைந்து பக்கத்து நாடுகளுடன் செயல்படும்.
ஆசிய குடும்பங்களின் எதிர்காலத்தை ஒற்றுமையாக பாதுகாப்போம்” என்று பேசியுள்ளார்.

