பெறுமதி சேர்க்கப்பட்ட வரி திருத்தச் சட்டமூலத்தின்படி, உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் திரவப் பால் மற்றும் யோகட் ஆகியவை வற்( VAT) வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு வருவாய்த் துறை தெரிவித்துள்ளது.
இந்த மாதம் 11 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் திரவ பால் மற்றும் யோகட் மீதான வற் (VAT) வரி நீக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

