• Login
Thursday, April 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ICU-வில் விமானப் பணிப்பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை – என்ன நடந்தது?

GenevaTimes by GenevaTimes
April 16, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
ICU-வில் விமானப் பணிப்பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை – என்ன நடந்தது?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:April 16, 2025 11:17 AM IST

விமானப் பணிப்பெண் ICU-வில் வென்டிலேட்டரில் இருந்தபோது மருத்துவமனை ஊழியர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கோப்புப்படம் கோப்புப்படம்
கோப்புப்படம்

குருகிராமில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 46 வயதான விமானப் பணிப்பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக புகார் அளித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 5 ஆம் தேதி, நீச்சல் குளத்தில் நீந்தியதால் ஏற்பட்ட உடல்நலக் குறைவால் ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த விமானப் பணிப்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதையடுத்து, உடல்நலம் சரியான பிறகு அவர் ஏப்ரல் 9ஆம் தேதி வீடு திரும்பினார். அப்போது, தனது கணவரிடம், மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) வென்டிலேட்டரில் இருந்தபோது, ஏப்ரல் 6 ஆம் தேதி சில மருத்துவமனை ஊழியர்கள் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக கணவரிடம் கூறியுள்ளார்.

இந்த சம்பவத்தைக் கேட்டு அதிர்ச்சியடைந்த கணவர், காவல்துறையில் புகார் அளிக்க முடிவு செய்தார். இதையடுத்து, பாதிக்கப்பட்ட தம்பதியினர் காவல்துறையை அணுகி புகார் அளித்தனர்.

அந்த புகாரில், தான் ICU-வில் வென்டிலேட்டரில் இருந்தபோது, அடையாளம் தெரியாத மருத்துவமனை ஊழியர்கள் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறியுள்ளார். மேலும் இந்த சம்பவம் நடைபெறும்போது இரண்டு செவிலியர்களும் அவர்களுடன் இருந்ததாகவும், அவர்களும் அதைத் தடுக்கவில்லை என்று கூறியுள்ளார். இந்த புகாரையடுத்து, சதார் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கையாக (FIR) வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதையும் படிக்க: மறுவாழ்வு மையத்தில் நோயாளி கொடூரமாக தாக்கப்பட்ட வீடியோ – வழக்கு பதிவு செய்த காவல்துறை

மேலும் பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலம், நீதிபதி முன் பதிவு செய்யப்பட்டதாக குருகிராம் காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். மேலும், ICU-வில் வென்டிலேட்டரில் இருந்தபோது, ​​தான் பலவீனமாக இருந்ததால், அந்த ஆணின் நடவடிக்கைகளை எதிர்க்க முடியாத நிலைமையில் இருந்ததாக அவர் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தற்போது, மருத்துவமனையின் சிசிடிவி காட்சிகள் மூலம் குற்றவாளியை அடையாளம் காண முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குற்றவாளி விரைவில் கைது செய்யப்படுவார் என்று காவல்துறை செய்தித் தொடர்பாளர் உறுதியளித்துள்ளார்.

First Published :

April 16, 2025 11:17 AM IST

Read More

Previous Post

Tamilmirror Online || பூமி திரும்பிய காதலியை வரவேற்ற ஜெப்

Next Post

தடுமாறும் ராஜஸ்தானுடன் இன்று மோதல்: தோல்வியில் இருந்து மீளும் முனைப்பில் டெல்லி | Delhi captials to face struggling Rajasthan royals today match preview ipl 2025

Next Post
தடுமாறும் ராஜஸ்தானுடன் இன்று மோதல்: தோல்வியில் இருந்து மீளும் முனைப்பில் டெல்லி | Delhi captials to face struggling Rajasthan royals today match preview ipl 2025

தடுமாறும் ராஜஸ்தானுடன் இன்று மோதல்: தோல்வியில் இருந்து மீளும் முனைப்பில் டெல்லி | Delhi captials to face struggling Rajasthan royals today match preview ipl 2025

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin