Last Updated:
உலகம் முழுவதும் 80 கோடி பார்வையாளர்கள் விளையாட்டுகளை டிஜிட்டல் வடிவில் கண்டு வருகின்றனர்.
ஜியோ ஹாட்ஸ்டார் செயலியில் கிரிக்கெட்டை பார்க்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த நிலையில், அதில் சர்வதேச நிறுவனங்கள் தங்களது முதலீடுகளை அதிகரித்துள்ளன.
ஜியோ மற்றும் ஹாட்ஸ்டார் ஆகிய இரு ஓடிடி தளங்கள் தற்போது ஒரே தளமாக ஜியோ ஹாட்ஸ்டார் என்ற பெயரில் இணைக்கப்பட்டு உள்ளது. இந்த இரண்டு ஓடிடி தளங்களில் இருக்கும் கன்டென்ட்கள் அனைத்தும் `ஜியோ ஹாட்ஸ்டார்’ என்ற ஒரே தளத்திற்கு கீழ் கிடைக்கிறது. ஐ.பி.எல், சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் மற்றும் சர்வதேச பிற விளையாட்டுப் போட்டிகள் என அனைத்தும் இந்த ஓடிடி தளத்தில் ஒளிபரப்பபடுகிறது.
டாடா ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை ஜியோ ஹாட்ஸ்டாரில் பார்க்கும் பார்வையாளர்களின் எல்லை விரிவடைந்து வருகிறது. இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளிலும் இருப்போர் ஹாட்ஸ்டார் மூலம் ஐபிஎல் தொடரை கண்டு ரசித்து வருகின்றனர். இந்த நிலையில், டாடா ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஒளிபரப்பில் டானூப் பிராப்பர்டீஸ் நிறுவனம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் உடன் வணிக ஒப்பந்தம் செய்துள்ளது. இதேபோல் லட்டாஃபா என்ற வாசனை திரவிய நிறுவனமும் ஜியோ ஹாட்ஸ்டாரில் விளம்பரம் செய்துள்ளது.
Also Read: Gold Rate | தங்கம் விலை மீண்டும் ரூ.60,000-க்கு குறையலாம்..! பொருளாதார நிபுணர்கள் சொல்லும் காரணம்
ஏற்கனவே, ஜியோ ஹாட்ஸ்டாரில் எமிரேட்ஸ், எதிஹாத், கத்தார் ஏர்வேஸ் உள்ளிட்ட பன்னாட்டு பிராண்டுகள் விளம்பரம் செய்துள்ளன. இந்த சூழலில், சுற்றுலா, ரியல் எஸ்டேட் மற்றும் விமானத்துறை ஆகிய விளம்பரங்களும் அதிகரித்துள்ளன. உலகம் முழுவதும் 80 கோடி பார்வையாளர்கள் விளையாட்டுகளை டிஜிட்டல் வடிவில் கண்டு வருகின்றனர். இதில் 25 முதல் 45 வயதுடையவர்கள் கிரிக்கெட்டை அதிகம் ரசிப்பதாக தெரிய வந்துள்ளது. ஜியோ ஹாட்ஸ்டாரில் அளிக்கப்படும் விளம்பரங்கள் வணிகமாக மாறுவதாக ஜியோ ஹாட்ஸ்டார் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
April 16, 2025 8:56 AM IST
ஜியோ ஹாட்ஸ்டாரில் கிரிக்கெட் பார்க்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கை உயர்வு.. முதலீடுகள் அதிகரிப்பு!


