• Login
Monday, April 20, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

Prime Minister Mudra Yojana | கூலி வேலை செய்பவர் முதல் தொழில்முனைவோர் வரை… பலரது வாழ்க்கையை மாற்றிய பிரதான் மந்திரி முத்ரா யோஜனா…

GenevaTimes by GenevaTimes
April 15, 2025
in வணிகம்
Reading Time: 1 min read
0
Prime Minister Mudra Yojana | கூலி வேலை செய்பவர் முதல் தொழில்முனைவோர் வரை… பலரது வாழ்க்கையை மாற்றிய பிரதான் மந்திரி முத்ரா யோஜனா…
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தமிழ்நாட்டைச் சேர்ந்தவரும், பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவருமான சரஸ்வதி, ஒரு காலத்தில் உள்ளூர் மாவு ஆலையில் தினசரி கூலி வேலை செய்து வந்தார். சொந்தமாக தொழில் செய்ய வேண்டும் என்ற கனவுகள் அவருக்கு இருந்தபோதிலும், நிதி நெருக்கடிகள் அதற்குத் தடையாக இருந்தன. சிறு மற்றும் குறு நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் வரை பிணையமில்லாத கடன்களை வழங்கும் பிரதான் மந்திரி முத்ரா யோஜனா பற்றி 2022ம் ஆண்டு அறிந்தபோது அவரது வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்பட்டது.

சொந்தமாக மாவு ஆலை அமைப்பதற்கு எவ்வளவு செலவு ஆகும் என விசாரித்தபோது, அதற்கு 5 லட்ச ரூபாய்க்கும் குறைவாகவே தேவைப்படும் என்று கண்டறிந்தார். இந்தியன் வங்கியின் ரெட்ஹில்ஸ் கிளையின் உதவியுடன், சரஸ்வதிக்கு 4.86 லட்சம் ரூபாய் முத்ரா கடன் கிடைத்தது. இன்று, அவர் சொந்தமாக “திருநாவுக்கரசர் மாவு ஆலை” நடத்தி வருகிறார். இதன் மூலம் ஏற்கனவே நான்கு பேருக்கு வேலைவாய்ப்பு அளித்துள்ளார். இந்த திட்டத்தின் உதவியால் ஒரு காலத்தில் வேலை தேடுபவராக இருந்த சரஸ்வதி, இன்று வேலை வழங்குபவராக மாறியுள்ளார்.

முத்ரா திட்டத்தின் 10வது ஆண்டு விழாவின் ஒரு பகுதியாக நிதி அமைச்சகத்தால் சரஸ்வதியின் கதை பிரபல சமூக ஊடகமான ‘X’ தளத்தில் பகிரப்பட்டுள்ளது. அதோடு மட்டுமின்றி, மற்றொரு வெற்றியாளரின் கதையையும் நிதி அமைச்சகம் பகிர்ந்து கொண்டுள்ளது. பிரதான் மந்திரி முத்ரா யோஜனாவின் கீழ் கடன் வாங்கி ஒரு பணியாளராகத் தொடங்கிய மனோஜ் நாத் என்ற நபர், தற்போது 10 பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கியுள்ளார்.

10 Glorious Years of Mudra: FROM DAILY WAGE WORKER TO ENTREPRENEUR

Saraswathi from Tamil Nadu turned her dream into reality with a ₹4.86 lakh Mudra loan. Today, she runs her own flour mill and provides jobs to 4 others. #10YearsofMudra pic.twitter.com/IiysjFCpeA


— DFS (@DFS_India) April 5, 2025

பிரதான் மந்திரி முத்ரா யோஜனா என்றால் என்ன?

ஏப்ரல் 8, 2015 அன்று தொடங்கப்பட்ட பிரதான் மந்திரி முத்ரா யோஜனா (PMMY) என்பது பெருநிறுவனம் அல்லாத, விவசாயம் அல்லாத சிறு/நுண் நிறுவனங்களுக்கு நிதி உதவி வழங்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு அரசாங்கத் திட்டமாகும். இந்தத் திட்டத்தின் கீழ், வணிக வங்கிகள், கிராம வங்கிகள், சிறு நிதி வங்கிகள், நுண் கடன் நிறுவனங்கள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் மூலம் ரூ.10 லட்சம் வரை கடன்கள் வழங்கப்படுகின்றன.

இதையும் படிக்க: அட்வான்ஸ் பணத்தை வீட்டு உரிமையாளர் திரும்ப கொடுக்கவில்லையா…? வாடகைக்கு இருந்தவர் என்ன செய்யலாம்…?

தொழிலின் நிலையைப் பொறுத்து கடன்கள் மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தப்படுகின்றன:

ஷிஷு: ஆரம்ப கட்டத்தில் உள்ள வணிகங்களுக்கு ரூ.50,000 வரை கடன்கள்.

கிஷோர்: வளர்ந்து வரும் வணிகங்களுக்கு ரூ.50,001 முதல் ரூ.5 லட்சம் வரை கடன்கள்.

தருண்: நன்கு நிறுவப்பட்ட நிறுவனங்களுக்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை கடன்கள்.

இதையும் படிக்க: FD-க்கான வட்டி விகிதங்களை அதிரடியாக திருத்தியுள்ள Equitas சிறுநிதி வங்கி… மாற்றங்கள் என்ன..?

முத்ரா கடன்களின் மிகப்பெரிய நன்மைகளில் ஒன்று, அவை பிணையம் இல்லாதவை. முதல்முறை தொழில்முனைவோர் மற்றும் குறிப்பிடத்தக்க சொத்துக்கள் இல்லாதவர்களுக்கு எளிதாக கடன் பெற இது உதவுகிறது.

First Published :

April 15, 2025 6:04 PM IST

தமிழ் செய்திகள்/வணிகம்/

Prime Minister Mudra Yojana | கூலி வேலை செய்பவர் முதல் தொழில்முனைவோர் வரை… பலரது வாழ்க்கையை மாற்றிய பிரதான் மந்திரி முத்ரா யோஜனா…

Read More

Previous Post

IPL 2025 : கணவருக்காக மதம் மாறிய பிரபல கிரிக்கெட் வீரரின் மனைவி..

Next Post

வர்த்தகப் போர் தீவிரம்: அமெரிக்காவின் ‘போயிங்’ ஜெட் விமானங்கள் வாங்குவதை நிறுத்தியது சீனா! | China stops Boeing jet deliveries amid trade war with US says report

Next Post
வர்த்தகப் போர் தீவிரம்: அமெரிக்காவின் ‘போயிங்’ ஜெட் விமானங்கள் வாங்குவதை நிறுத்தியது சீனா! | China stops Boeing jet deliveries amid trade war with US says report

வர்த்தகப் போர் தீவிரம்: அமெரிக்காவின் ‘போயிங்’ ஜெட் விமானங்கள் வாங்குவதை நிறுத்தியது சீனா! | China stops Boeing jet deliveries amid trade war with US says report

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin