அந்த மௌனத்தை, திடீரென பெரும் இடியின் ஓசை போன்ற சப்தத்தை எழுப்பியவாறு செங்குத்தாக பிளவுபட்டு உடையும் 70 meter (230 feet) உயரமான பனிப்பாறைகளின் விளிம்புகள் நம்மை மிரள வைத்திடும்.
இந்த பனிப்பாறைகள் கடைசி ice ageல் (சுமார் 18,000 ஆண்டுகளுக்கு முன்பு) உருவானவை என விஞ்ஞானிகள் கணித்திருக்கிறார்கள்.
6 நாட்களாக நீடித்த இந்த அற்புத உணர்வுடன், எங்கள் பயணத்தின் அடுத்த இலக்கான 7 உலக அதிசயங்களில் ஒன்றான Peru நாட்டில் உள்ள மச்சுபிச்சு (Maachu Pichu) போவதற்காக El Calafate விமான நிலையத்தை அடைந்தோம்.
ஆனால் அன்று வீசிய கடும் பனிப்புயல் ( blizzard) காரணமாக, அடுத்த 3 நாட்களுக்கு விமான நிலையம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அத்துடன் தொலைதொடர்பு வசதிகள் எதுவும் இயங்கவில்லை. எனவே எங்கள் அடுத்த கட்ட பயண திட்டத்தை தள்ளிப்போடுவது கடினமாக இருந்தது.
எனவே, விமான நிலைய அதிகாரிகளின் ஆலோசனைப்படி, சுமார் 300 கிலோமீட்டர் தொலைவில் அட்லாண்டிக்கடல் பகுதியில் உள்ள Rio Gallegos என்ற விமான நிலயத்துக்கு சாலை மார்க்கமாக செல்வது என முடிவு எடுத்தோம்.
அந்த சாலைப் பயணம்தான் நாங்கள் சற்றும் எதிர்பாராத ஒரு பெரும் வாய்ப்பை உருவாக்கி தந்தது.
ஆம், தென் அமெரிக்க கண்டத்தின் மிகப்பெரிய, மற்றும் உலகின் எட்டாவது பெரிய பாலைவனமான Patagonia பாலைவனத்தின் குறுக்கே பயணித்துதான் Rio Gallegosஐ அடைய முடியும்.

