• Login
Tuesday, April 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

அட்வான்ஸ் பணத்தை வீட்டு உரிமையாளர் திரும்ப கொடுக்கவில்லையா…? வாடகைக்கு இருந்தவர் என்ன செய்யலாம்…?

GenevaTimes by GenevaTimes
April 14, 2025
in வணிகம்
Reading Time: 1 min read
0
அட்வான்ஸ் பணத்தை வீட்டு உரிமையாளர் திரும்ப கொடுக்கவில்லையா…? வாடகைக்கு இருந்தவர் என்ன செய்யலாம்…?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வீட்டை அவர்கள் காலி செய்யும்போது, வீட்டிற்கு எந்த ஒரு சேதமும் ஏற்படாத பட்சத்தில் ஒரு சில கழித்தல்கள் போக வீட்டின் உரிமையாளர் வாடகை இருந்தவர்களுக்கு அட்வான்ஸ் பணத்தை திருப்பிக் கொடுக்க வேண்டும். ஒருவேளை வீட்டு உரிமையாளர் எந்தவொரு தகுந்த காரணமும் இல்லாமல், அட்வான்ஸ் பணத்தை திருப்பிக் கொடுக்க மறுத்தால், வாடகை இருந்தவர்களுக்கு பெரும் பிரச்சினையாக அமைகிறது. இந்த மாதிரியான சூழலில் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த சில தகவல்களை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

வாடகை ஒப்பந்தத்தை புரிந்து கொள்ளுதல்:

  • ஒரு வீட்டிற்கு வாடகைக்கு செல்வதற்கு முன்பு அவர்கள் வழங்கும் வாடகை ஒப்பந்தத்தை நீங்கள் முழுவதுமாக படித்து தெரிந்து கொள்ள வேண்டும்.
  • செலுத்தப்பட்ட அட்வான்ஸ் தொகை.
  • அட்வான்ஸ் தொகை எவ்வாறு செலுத்தப்பட்டது?
  • எந்தெந்த நிபந்தனைகளின் கீழ் அட்வான்ஸ் பணத்தில் இருந்து பிடித்தங்கள் செய்யப்படலாம்?
  • அட்வான்ஸ் பணத்தை திருப்பிக் கொடுப்பதற்கான கால அவகாசம் மற்றும் செயல்முறை.

இந்தியாவில் அட்வான்ஸ் பணம் தொடர்பான சட்டரீதியான ஒழுங்குமுறை:

இந்தியாவில் செக்யூரிட்டி டெபாசிட்கள் சம்பந்தப்பட்ட ஒழுங்குமுறைகளை பொறுத்தவரை, மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும். பெரும்பாலான மாநிலங்களில் வீட்டு உரிமையாளர் 2 அல்லது 3 மாத வாடகை பணத்தை அட்வான்ஸாக பெற்றுக் கொள்ளலாம். ஒப்பந்த காலம் முடிவடைந்த உடன் அந்த டெபாசிட் தொகையை நியாயமான முறையில் திருப்பிக் கொடுக்க வேண்டும்.

இதில் வீட்டிற்கு ஏதேனும் சேதங்கள் அல்லது வீட்டு வாடகை செலுத்த தவறி இருத்தல் போன்றவற்றிற்கு அட்வான்ஸ் பணத்தில் இருந்து கழித்தது போக மீதி பணம் வாடகை இருந்தவர்களிடம் திருப்பிக் கொடுக்கப்பட வேண்டும். ஒருவேளை வீட்டு உரிமையாளர் அட்வான்ஸ் பணத்தை திருப்பிக் கொடுக்க தவறினால் பணத்தை மீட்டெடுக்க வாடகை இருந்தவர்களுக்கு பின்வரும் சட்டரீதியான ஆப்ஷன்கள் கிடைக்கின்றன.

1. இந்திய ஒப்பந்த விதி, 1872:

வாடகை ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள விதிகளை வீட்டு உரிமையாளர் மீறும் பட்சத்தில் வாடகை இருந்தவர்கள் இந்த விதியின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யலாம்.

இதையும் படிக்க: FD-க்கான வட்டி விகிதங்களை அதிரடியாக திருத்தியுள்ள Equitas சிறுநிதி வங்கி… மாற்றங்கள் என்ன..?

2. நுகர்வோர் பாதுகாப்பு விதி, 2019:

நியாயமற்ற முறையில் உரிமையாளர் டெபாசிட் பணத்தை வைத்துக் கொள்ள நினைத்தால் வாடகை இருந்தவர்கள் உரிமையாளர் மீது ஒரு நுகர்வோர் புகாரை அளிக்கலாம்.

3. பரிமாற்ற கடன்கள் சட்டம், 1881:

ஒருவேளை உரிமையாளர் டெபாசிட் தொகைக்கு பதிலாக ஒரு செக்கை வழங்கி, அந்த செக் பவுன்ஸ் ஆகும் பட்சத்தில் வாடகைக்கு இருந்தவர்கள் இந்த விதியின் பிரிவு 138-இன் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யலாம்.

4. மாநிலம் குறிப்பிட்ட வாடகை கட்டுப்பாட்டு விதிகள்:

பல மாநிலங்கள் தங்களுக்கே உரித்த வாடகை சம்பந்தமான கட்டுப்பாட்டு விதிகளை பின்பற்றுகின்றன. இவை, உரிமையாளர் மற்றும் வாடகைக்கு இருப்பவர்கள் இடையேயான உறவுகளை ஒழுங்குபடுத்துவதற்கு உதவுகிறது.

இதையும் படிக்க: சீனியர் சிட்டிசன்கள் 2024-25 நிதியாண்டிற்கு வருமான வரி ஃபைல் செய்ய பெஸ்ட் ITR படிவம் எது…?

அட்வான்ஸ் பணத்தை திரும்பப் பெறுவதற்கான வழிகள்:

சட்டரீதியான நடவடிக்கையை எடுப்பதற்கு முன்பு பேச்சுவார்த்தை மூலமாக சுமூகமாக பிரச்சினையை தீர்த்து வைக்க முடிவு செய்யவும். இமெயில் அல்லது டெக்ஸ்ட் மெசேஜ் மூலமாக பேசி பணத்தை திருப்பிக் கொடுக்குமாறு கேட்கலாம். ஒருவேளை உரிமையாளர் இதற்கு எந்தவிதமான பதில் அளிக்காத பட்சத்தில் அடுத்தபடியாக சட்டத்திற்கு உட்பட்டு ஒரு நோட்டீஸ் அனுப்பலாம்.

இந்த நோட்டீஸ் மூலமாக எந்த ஒரு முடிவும் பெறப்படாத பட்சத்தில் வாடகை ஒப்பந்தம், அட்வான்ஸ் பணம் கொடுத்ததற்கான நிரூபணம், வாடகைக்கு வரும்போது இருந்த வீட்டின் நிலை தொடர்பான புகைப்படங்கள் மற்றும் காலி செய்யும்போது வீட்டின் நிலைக்கான புகைப்படங்கள் ஆகிய ஆவணங்களை வைத்து சிவில் வழக்குப் பதிவு செய்யலாம்.

First Published :

April 14, 2025 7:45 PM IST

தமிழ் செய்திகள்/வணிகம்/

அட்வான்ஸ் பணத்தை வீட்டு உரிமையாளர் திரும்ப கொடுக்கவில்லையா…? வாடகைக்கு இருந்தவர் என்ன செய்யலாம்…?

Read More

Previous Post

ஐபிஎல் 2025: ருதுராஜ்க்கு மாற்றாக 17 வயது இளம் பேட்ஸ்மேன்.. கண்டுபிடித்த சிஎஸ்கே.. யார் அவர்! பின்னணி என்ன?

Next Post

கட்சி வேட்பாளரை ‘துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக’ பிகேஆர் பிரதிநிதி மீது போலீஸ்

Next Post
கட்சி வேட்பாளரை ‘துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக’ பிகேஆர் பிரதிநிதி மீது போலீஸ்

கட்சி வேட்பாளரை ‘துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக’ பிகேஆர் பிரதிநிதி மீது போலீஸ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin