சுற்றுலா பயணிகளுக்கு சொர்க்கம்
தான் தினம் தினம் வளர்த்தெடுத்த பாலம், மிகவும் உறுதியானதாக எழுந்து நிற்பதைப் பார்க்க பெருமைதயாக இருப்பதாக இந்த திட்டத்தின் முதன்மை பொறியாளர் லி ஜாவோ தெரிவித்துள்ளார்.
இங்கு வரும் சுற்றுலா பயணிகள் உயரமான கண்ணாடி பாலத்தையும், உலகிலேயே உயரமான பிஞ்சி ஜம்ப்பிங்கையும் அனுபவிக்கலாம் என்க் கூறியுள்ளனர்.
சுற்றுலாப்பயணிகளுக்கு மட்டுமல்லாமல் உள்ளூர்வாசிகளின் பயணத்துக்கும் இது உதவும் என்கின்றனர். தினசரி 4 மணிநேர பயணத்தை 1 மணி நேரமாக குறைக்கும் என்கின்றனர்.
இதேப்போல சீனா உலகின் மிகப் பெரிய அணைக்கட்டையும் உருவாக்க முயற்சித்து வருவது குறிப்பிடத்தக்கது. யார்லுங் சாங்போ ஆற்றின் மீது அமையும் அந்த அணையின் மதிப்பு லட்சம் கோடிகளைத் தொடும் எனக் கூறப்படுகிறது.

