• Login
Saturday, April 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

நிகோலஸ் பூரன், எய்டன் மார்க்ரம் அதிரடியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அசத்தல் வெற்றி | pooran markram helps lsg to won match against gujarat titans ipl2025

GenevaTimes by GenevaTimes
April 13, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
நிகோலஸ் பூரன், எய்டன் மார்க்ரம் அதிரடியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அசத்தல் வெற்றி | pooran markram helps lsg to won match against gujarat titans ipl2025
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


லக்னோ: ஐபிஎல் டி20 கிரிக்​கெட் தொடரில் குஜ​ராத் டைட்​டன்ஸ் அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தில் நிகோலஸ் பூரன், எய்​டன் மார்க்​ரம் ஆகியோரது அதிரடி​யால் லக்னோ சூப்​பர் ஜெயண்ட்ஸ் அணி 6 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றது.

லக்​னோ​வில் நேற்று நடை​பெற்ற இந்த ஆட்​டத்​தில் முதலில் பேட் செய்த குஜ​ராத் அணி 20 ஓவர்​களில் 6 விக்​கெட்​கள் இழப்​புக்கு 180 ரன்​கள் குவித்​தது. கேப்​டன் ஷுப்​மன் கில் 38 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 6 பவுண்​டரி​களு​டன் 60 ரன்​களும், சாய் சுதர்​சன் 37 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 7 பவுண்​டரி​களு​டன் 56 ரன்​களும் விளாசினர். ஜாஸ் பட்​லர் 16, வாஷிங்​டன் சுந்​தர் 2, ஷேர்​பேன் ரூதர்​போர்டு 22, ராகுல் டெவாட்​டியா 0 ரன்​களில் நடையை கட்​டினர். ஷாருக் கான் 11, ரஷித் கான் 4 ரன்​களு​டன் ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தனர்.

ஒரு கட்​டத்​தில் குஜ​ராத் அணி 12 ஓவர்​களில் 120 ரன்​கள் குவித்து வலு​வான நிலை​யில் இருந்​தது. இதனால் அந்த அணி 220 ரன்​களை வரை குவிக்​கக்​கூடும் என எதிர்​பார்க்​கப்​பட்​டது. ஆனால் அதிரடி​யாக விளை​யாடி வந்த ஷுப்​மன் கில், சாய் சுதர்​சன் ஜோடியை அவேஷ் கான் 13-வது

ஓவரின் முதல் பந்​தில் பிரித்​தார். தொடர்ந்து 14-வது ஓவரின் முதல் பந்​தில் சாய் சுதர்​சனை, ரவி பிஷ்னோய் ஆட்​ட​மிழக்​கச் செய்​தார். இந்த இரு விக்​கெட்​களும் பெரிய திருப்பு முனையை ஏற்​படுத்​தி​யது.

நடு​வரிசை​யில் வாஷிங்​டன் சுந்​தர், ஜாஸ் பட்​லர் ஆகியோரை முறையே ரவி பிஷ்னோய், திக்​வேஷ் ராத்தி ஆகியோர் விரை​விலேயே பெவிலியனுக்கு திருப்​பினர். பின்​வரிசை​யில் ரூதர்​போர்டு 19 பந்​துகளை எதிர்​கொண்ட போதி​லும் அவரால் பெரிய அளவில் தாக்​குதல் ஆட்​டம் மேற்​கொள்ள முடி​யாமல் போனது. ரூதர்​போர்​டை​யும், ராகுல் டெவாட்​டி​யா​வை​யும் ஷர்​துல் தாக்​குர் ஆட்​ட​மிழக்​கச் செய்து இறு​திப்​பகு​தி​யில் ரன் குவிப்பை வெகு​வாக கட்​டுப்​படுத்​தி​னார். கடைசி 8 ஓவர்​களில் குஜ​ராத் அணி​யால் வெறும் 60 ரன்​கள் மட்​டுமே சேர்க்க முடிந்​தது. லக்னோ அணி சார்​பில் பந்து வீச்​சில் ஷர்​துல் தாக்​குர், ரவி பிஷ்னோய் ஆகியோர் தலா 2 விக்​கெட்​களை​யும் திக்​வேஷ் ராத்​தி, அவேஷ் கான் ஆகியோர்

தலா ஒரு விக்​கெட்​டை​யும் கைப்​பற்​றினர்.

181 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த லக்னோ சூப்​பர் ஜெயண்ட்ஸ் 19.3 ஓவர்​களில் 4 விக்​கெட்​கள் இழப்​புக்கு 186 ரன்​கள் எடுத்து வெற்றி பெற்​றது. தொடக்க வீர​ரான எய்​டன் மார்க்​ரம் 31 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 9 பவுண்​டரி​களு​டன் 58 ரன்​களும், நிகோலஸ் பூரன் 34 பந்​துகளில், 7 சிக்​ஸர்​கள், ஒரு பவுண்​டரி​யுடன் 61 ரன்​களும் விளாசி அணி​யின் வெற்​றி​யில் முக்​கிய பங்கு வகித்​தனர்.

தொடக்க வீர​ராக களமிறங்​கிய கேப்​டன் ரிஷப் பந்த் 18 பந்​துகளில், 4 பவுண்​டரி​களு​டன் 21 ரன்​களும், டேவிட் மில்​லர் 7 ரன்​களும் எடுத்து ஆட்​டமிழந்​தனர். ஆயுஷ் பதோனி 20 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 2 பவுண்​டரி​களு​டன் 28 ரன்​கள் எடுத்து ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தார். 6 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற லக்னோ சூப்​பர் ஜெயண்ட்ஸ் நடப்பு தொடரில் 4-வது வெற்​றியை பதிவு செய்​தது.

அந்த அணி 6 ஆட்​டங்​களில் விளை​யாடி 4 வெற்​றி, 2 தோல்வி​களு​டன் 8 புள்​ளி​கள் பெற்று பட்​டியலில் 5-வது இடத்​தில் இருந்து 3-வது இடத்​துக்கு முன்​னேறியது. அதேவேளை​யில் தொடர்ச்​சி​யாக 4 வெற்​றிகளை பெற்​றிருந்த குஜ​ராத் டைட்​டன்ஸ் தோல்​வியை அடைந்​துள்​ளது. 6 ஆட்​டங்​களில் விளை​யாடி உள்ள அந்த அணி 4 வெற்​றி, 2 தோல்வி​களு​டன் 8 புள்​ளி​களு​டன் முதலிடத்​தில் இருந்து 2-வது இடத்​துக்கு இறங்​கி​யுள்​ளது. ஆட்​ட நாயக​னாக லக்​னோ அணி​யின்​ எய்​டன்​ மார்​க்​ரம்​ தேர்​வா​னார்​.



Read More

Previous Post

‘நான் கோவைக்கு போய் 13 வருசமாச்சு.. எதற்கு என்னை சுட்டுப் பிடிக்க வேண்டும்?’ வரிச்சியூர் செல்வம் பேட்டி!

Next Post

வாட்ஸ்அப் சேனலை அறிமுகம் செய்த ரிசர்வ் வங்கி! | reserve bank of india launched whatsapp channel

Next Post
வாட்ஸ்அப் சேனலை அறிமுகம் செய்த ரிசர்வ் வங்கி! | reserve bank of india launched whatsapp channel

வாட்ஸ்அப் சேனலை அறிமுகம் செய்த ரிசர்வ் வங்கி! | reserve bank of india launched whatsapp channel

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin