Last Updated:
அமெரிக்க அதிபராக பதவியேற்ற டிரம்ப், அந்நாட்டுப் பொருட்களின் மீது அதிக இறக்குமதி வரி விதிக்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளின் பொருட்களுக்கு அமெரிக்காவிலும் அதே அளவுக்கு பரஸ்பர வரி விதிக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
பரஸ்பர வரி விதிப்பு முறையில் இருந்து ஸ்மார்ட்போன், லேப்டாப் உள்ளிட்ட மின்னணு பொருட்களுக்கு விலக்கு அளிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
அமெரிக்க அதிபராக பதவியேற்ற டிரம்ப், அந்நாட்டுப் பொருட்களின் மீது அதிக இறக்குமதி வரி விதிக்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளின் பொருட்களுக்கு அமெரிக்காவிலும் அதே அளவுக்கு பரஸ்பர வரி விதிக்கப்படும் என்று அறிவித்திருந்தார். இந்த வரி விதிப்பு கடந்த 2 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது.
அதன்படி, இந்தியப் பொருட்களின் இறக்குமதிக்கு 27 சதவிகிதமும், சீனாவுக்கு 34 சதவிகிதமும், வங்கதேசத்திற்கு 37 சதவிகிதமும் என ஒவ்வொரு நாடுகளுக்கும் வரி விதிக்கப்பட்டிருந்தது. பின்னர், அதை 90 நாட்களுக்கு நிறுத்தி வைத்த அதிபர் ட்ரம்ப், சீனா மீதான வரி நீடிக்கும் என்று அறிவித்தார். அமெரிக்காவின் இந்த வரி விதிப்புக்கு பல்வேறு நாடுகள் கடும் அதிருப்தி தெரிவித்தன. இவ்வாறு, அமெரிக்க அதிபராக பதவியேற்ற டிரம்ப், பரஸ்பர வரி என்ற பெயரில் உலக நாடுகளுக்கு இறக்குமதி வரியை கடுமையாக அதிகரித்தார்.
இந்நிலையில், சீனா – அமெரிக்கா இடையே வர்த்தப்போர் மூண்டதை அடுத்து, சீன பொருட்களுக்கு 145 சதவீதம் வரி விதிப்பதாக அமெரிக்காவும், அமெரிக்க பொருட்களுக்கு 125 சதவீதம் வரி விதிப்பதாக சீனாவும் போட்டிக்கு போட்டியாக அறிவித்தன. இதனால், சீனாவில் இருந்து பெரும்பாலான பொருட்களை உற்பத்தி செய்யும் ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் கவலையில் மூழ்கின.
Also Read: அமெரிக்கா-சீனா வரி யுத்தம்.. இந்தியாவில் செல்போன், டிவி விலை குறைகிறதா?
இதற்கிடையே, ஸ்மார்ட் போன், லேப்டாப், மானிட்டர்கள், தொலைத்தொடர்பு சாதனங்கள், செமிகண்டெக்டர் உள்ளிட்ட பொருட்களுக்கு பரஸ்பர வரியில் இருந்து விலக்கு அளிப்பதாக அமெரிக்க சுங்க மற்றும் எல்லை பாதுகாப்புத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. இதனால், ஆப்பிள், சாம்சங், NVIDIA உள்ளிட்ட நிறுவன பங்குகளின் விலை திங்கட்கிழமை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
April 13, 2025 9:36 AM IST
முற்றும் அமெரிக்கா-சீனா வரி யுத்தம்.. மின்னணு பொருட்களுக்கு விலக்கு அளிப்பதாக அமெரிக்கா அறிவிப்பு!


