• Login
Monday, March 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

நெதர்லாந்தில் நிலவிய பல மணி நேர பதற்றம்: பிணைக் கைதிகள் அனைவரும் விடுவிப்பு | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
March 30, 2024
in மலேசியா
Reading Time: 1 min read
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஆம்ஸ்டெர்டாம்:

நெதர்லாந்தின் ஈத் நகரில் பணயக் கைதிகள் அனைவரும் பத்திரமாக விடுவிக் கப்பட்டதாகவும், சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு போலீசார் தெரிவித்துள்ளனர்.

நெதர்லாந்தின் ஈத் நகரில் உள்ள இரவு விடுதி ஒன்றில் நேற்று அதிகாலை 4 பேர் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டனர். இது பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என அஞ்சப்பட்டது. இதையடுத்து, பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசார், வெடி குண்டு நிபுணர்கள் உள்பட பாதுகாப்புப் படையினர் பெருமளவில் குவிக்கப்பட்டனர். நகரின் 150 கட்டிடங்களில் வசித்தவர்கள் பாதுகாப்பு கருதி அங்கிருந்து வெளியேற்றப் பட்டனர். இதனால், நெதர்லாந்தில் காலை முதல் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பல மணி நேர பரபரப்புக்கு மத்தியில் பிணைக் கைதிகளில் 3 பேர் விடுவிக் கப்பட்டதை அடுத்து, அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு கைகளை ஆட்டியவாறு வெளியே வந்தனர். அவர்கள் வெளியே வந்த வீடியோவை நெதர்லாந்து அரசு தொலைக்காட்சி வெளியிட்டது. அதன் தொடர்ச்சியாக, நான்காவது நபரும் பத்தி ரமாக வெளியே வந்தார்.

இந்தச் சம்பவம் குறித்து எக்ஸ் பக்கத்தில் தகவல் வெளியிட்ட நெதர்லாந்து போலீசார், கடைசி பிணைக் கைதியும் விடுவிக்கப்பட்டார். ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போதைய சூழலில் கூடுதல் விவரங்களை தெரிவிக்க இயலாது என தெரிவித்தனர்.

இதனிடையே, இந்த சம்பவத்தில் “பயங்கரவாத நோக்கம்” இருப்பதாக சந்தேகிக்க எந்த காரணமும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

“பிணைக் கைதிகள் அனைவரும் ஒரு பயங்கரமான சூழ்நிலையில் இருந்து விடுபட் டுள்ளார்கள். அவர்கள் அனைவரும் பத்திரமாக வெளியே வர வேண்டும்; அவர்களது குடும்பத்தினரோடு சேர வேண்டும் என்பதுதான் எனது கவலையாக இருந்தது. தற் போது நிலைமை விரைவாகவும் பாதுகாப்பாகவும் தீர்க்கப்படும் என்று நம்புகிறேன்” என்று ஈத் மேயர் ரெனே வெர்ஹல்ஸ்ட் தெரிவித்துள்ளார்.



Read More

Previous Post

டிவி நிகழ்ச்சி அறிமுகம்.. 3 ஆண்டுகள் பழக்கம்.. நடிகையுடன் மாலிக்குக்கு தொடர்பு ஏற்பட்டது எப்படி?

Next Post

இன்றைய வானிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு இதோ!

Next Post
இன்றைய வானிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு இதோ!

இன்றைய வானிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு இதோ!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin