Last Updated:
லக்னோ அணி குஜராத் அணியை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 8 புள்ளிகளுடன் 3 ஆவது இடத்திற்கு முன்னேறியது. கேப்டன் ரிஷப் பந்த் 21 ரன்கள், ஏய்டன் மார்கம் 58 ரன்கள், நிக்லோஷ் பூரன் 61 ரன்கள்.
ஐபிஎல் 18 ஆவது சீசனில் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. குஜராத் நிர்ணயத்த 180 ரன்களை லக்னோ அதிரடியாக சேஸிங் செய்தது.
ஐபிஎல் தொடரின் இன்று மதியம் 3.30 மணிக்கு நடைபெற்ற போட்டியில் குஜராத் – லக்னோ அணிகள் மோதின. இந்த போட்டியில் லக்னோ அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து குஜராத் அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் சுப்மன் கில் – சாய் சுதர்சன் களமிறங்கினார். 120 ரன்களை பார்ட்னிர்ஷிப்பாக வைத்து சிறந்த அடிதளத்தை குஜராத் அணிக்கு அமைத்தனர். சுப்மன் கில் 60 ரன்களிலும் சாய் சுதர்சன் 56 ரன்களிலும் அவுட்டாகி வெளியேறினர்.
குஜராத் அணியின் தொடக்கம் சிறப்பாக அமைந்தாலும் அதற்கு பின் வந்த வீரர்கள் யாரும் அதிரடி காட்ட முடியாமல் திணறியதால் 20 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்களை மட்டுமே எடுத்தது. லக்னோ அணி சார்பில் சர்துல் தாகூர் மற்றும் பிஷ்னோய் தலா 2 விக்கெட்களை வீழத்தினர்.
இதையடுத்து 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணி ஆரம்பம் முதலே அதிரடி காட்டியது. கேப்டன் ரிஷப் பந்த் 21 ரன்களில் அவுட்டானாலும் ஏய்டன் மார்கம் மற்றும் நிக்லோஷ் பூரன் அதிரடியாக விளையாடி ரன்ரேட்டை ஜெட் வேகத்தில் உயர்த்தினார்கள். ஏய்டன் மார்க்கம் 58 ரன்களும் பூரன் 61 ரன்களும் எடுத்து அவுட்டாகினர்.
லக்னோ அணி இறுதியாக 19.3 ஓவர்களில் 4 விக்கெட்களை மட்டும் இழந்து இலக்கை எட்டியது. இந்த வெற்றியின் மூலம் 8 புள்ளிகள் உடன் லக்னோ 3 ஆவது இடத்திற்கு முன்னேறி உள்ளது. டெல்லி அணி முதல் இடத்திலும் குஜராத் 2 ஆவது இடத்திலும் உள்ளன. கேகேஆர் அணி 4 ஆவது இடத்தில் உள்ளது.
April 12, 2025 7:43 PM IST


