• Login
Monday, April 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

தங்கம் விலை எவ்வளவு ஏறினாலும் கவலையில்ல… மங்களகரமான தாலிக்கு இனி தங்கம் தேவையில்ல…

GenevaTimes by GenevaTimes
April 12, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
தங்கம் விலை எவ்வளவு ஏறினாலும் கவலையில்ல… மங்களகரமான தாலிக்கு இனி தங்கம் தேவையில்ல…
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தங்க நகை செய்யும் கலைஞரான ராஜா கடந்த சில வருடங்களாகக் கலைத்துறையில் மிகப்பெரிய சாதனைகளையும் படைத்திருக்கிறார். இது மட்டும் இல்லாமல் அவருடைய கலைத்துறையில் நிறைய விழிப்புணர்வுகளும், அவருடைய திறமைகளையும் வெளிப்படுத்தியுள்ளார். அந்தக் கலைத்துறையில் சாதனை படைத்திருந்தாலும் இவர் ஏழை எளிய மக்களுக்கு உதவ வேண்டும் என்று நினைத்து மஞ்சள் கொம்பில் மாங்கல்யத்தை வடிவமைத்துள்ளார்.

கல்யாணம் என்றாலே தங்க நகை என்றுதான் அனைவரும் பேசுவார்கள். ஆனால் நகை என்பது ஏழைகளுக்கு எட்டாக்கனி என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஆகையால் அந்த எட்டாக்கனியை யாரும் இது இருந்தால்தான் கல்யாணம் என்று நினைக்கக் கூடாது என்ற வகையில் இவர் மஞ்சள் கொம்பில் மாங்கல்யம் செய்து காட்டியுள்ளார்.

உங்கள் பகுதியில் அமைந்திருக்கும் மருத்துவமனைகள், மருத்துவர்கள் குறித்து மேலும் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்யவும்

பாரம்பரியமாக மஞ்சள் கிழங்கை மஞ்சள் கயிற்றில் கட்டி கல்யாணம் பண்ணுவார்கள். அவர்களுக்கு மாங்கல்யத்தில் கல்யாணம் பண்ணி இருக்கலாம் என்று ஒரு ஏக்கம் இருந்து கொண்டிருக்கும். அந்த ஏக்கத்தைத் தீர்க்கும் வகையில் இவர் மஞ்சளிலேயே மாங்கல்யம் செய்து அசத்தியுள்ளார்.

இவர் தங்க நகைப் பொருட்களை வடிவமைக்கும் துறையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தாலும், ஏழை எளிய மக்களும் தங்கமே இல்லாமல் நல்ல முறையில் மாங்கல்யம் கொண்டு திருமணம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இவர் இந்த செயலைச் செய்து இருக்கிறார்.

இது குறித்து ராஜா கூறுகையில், “நான் கோவை குனியமுத்தூரில் இருக்கிறேன். நான் காந்திபுரத்தில் நகைக் கடையில் நகை தொழிலாளியாக வேலை செய்து வருகிறேன். மஞ்சள் கொம்பில் எப்படி எனக்கு மாங்கல்யம் செய்ய வேண்டும் என்று தோன்றியது என்றால் கடந்த வருடம் என்னுடைய நண்பனுடைய மனைவிக்கு கல்யாணத்தின்போது என் நண்பன் பட்ட தவிப்பு என் கண்ணில் அப்படியே இருக்கிறது.

இதையும் படிங்க: Summer Vacation: மலைக்குள் மறைந்திருக்கும் சுனை… சுற்றுலாப் பயணிகள் அதிகம் அறியாத சூப்பர் ஸ்பாட்…

இன்று இருக்கும் தங்கத்தின் விலை என்ன? ஒரு தாலி செய்ய வேண்டும் என்றால் பத்தாயிரம் ரூபாய் தேவைப்படும். பாமர மக்களினால் இது சாத்தியம் இல்லை. அதனால் ஏழையின் உடைய இயக்கம் என்னுடைய ஏக்கமாக இருந்தது. கல்யாணத்தின் போது கடைசி நேரம் வரை தாலி கிடைக்கவில்லை என்றால் பெரியவர்கள் எல்லாம் சேர்ந்து ஒரு முடிவு எடுப்பார்கள். அது என்னவென்றால் தாலிக் கயிறு மஞ்சள் கொம்பு என்று சொல்வார்கள்.

நம் பாரம்பரியத்தில் மஞ்சள் கொம்பு மகிமை இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் கிருமி நாசினி மற்றும் எதிர்ப்புச் சக்தியை நீக்கி உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். நம்மை புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ளும். இந்த அளவிற்கு மஞ்சள் கொம்பிற்கு மகிமை அதிகம்.

இதனால் தான் அந்த மஞ்சள் கொம்பை வைத்து தாலி வடிவில் மாங்கல்யம் செய்யலாம் என்று எனக்கு ஒரு யோசனை வந்தது. மஞ்சள் கொம்பில் தாலி பார்க்கும் பொழுது ஏழைகளுக்கு ஒரு மகிழ்ச்சி வரும், ஒரு நம்பிக்கை வரும். ஏழைகளுக்குத் தங்கத்தை வைத்து கல்யாணம் பண்ணவில்லை என்றாலும் மாங்கல்யத்தை வைத்து கல்யாணம் பண்ணின திருப்தி அவர்களுக்கு இருக்கும்.

இதையும் படிங்க: Safe Kovai: பிரச்சினைன்னா உடனே போலீஸ்ட்ட சொல்லலாம்… கோவையில் மக்கள் பாதுகாப்புக்கு சகோ திட்டம்…

இவ்வாறு நான் செய்த மஞ்சள் கொம்பை வெளியிட்டபோது மக்கள் அனைவரும் என்னைத் தொடர்பு கொண்டு என்னிடம் கேட்டார்கள், இது கிடைக்குமா என்று? அப்பொழுதுதான் நான் செய்வது சரி என்று உணர்ந்தேன்.

யாராவது கல்யாணம் பண்ணப் போகிறேன் என்று இருந்தால் என்னுடைய சகோதரச் சகோதரிகளாக நினைத்து அவர்களுக்கு இதைத் தான் கொடுப்பதில் தயாராக இருக்கிறேன். எதிர்காலத்தில் தங்கத்தை வைத்து கல்யாணம் பண்ணிக் கொள்ளலாம் என்று நினைப்பவர்கள் வெறும் மஞ்சள் கொம்பு வைத்து தாலி கட்டாமல் இந்த மாங்கல்யத்தை வைத்து திருமணம் செய்து கொள்ளலாம். இதை நான் மஞ்சள் கொம்பில் மாங்கல்யம் என்ற தலைப்பில் நான் இதைப் பண்ணி இருக்கிறேன்.

இதுவரைக்கும் நான் நூற்றுக்கும் மேற்பட்ட சாதனைகளை நான் படைத்திருக்கிறேன். அந்த அனைத்தும் கலைப் படைப்புகள். சூரிய ஒளியில் ஓவியம், கண்ணுக்குள் ஓவியம், தண்ணீரில் மேல் மிதந்தபடி சிவலிங்கம் என்று நான் செய்திருக்கிறேன்.

இதையும் படிங்க: ”தென்னைக்கு எமனாகும் சுருள் வெள்ளை ஈ” – இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க தீர்வு நிச்சயம்…

மாங்கல்யம் செய்யும்போது என்னுடைய ஆழ்மனதில் ஒரு ஆத்ம திருப்தி ஒன்று கிடைத்தது. ஒரு நல்ல விஷயம் செய்து கொண்டு இருக்கிறோம் என்று.

இதை செய்து வெளியிட்ட பிறகு திருவண்ணாமலை, சேலம் போன்ற மாவட்டங்களிலிருந்தும் எனக்கு நிறைய அழைப்புகள் வருகிறது. இந்த விஷயம் நன்றாக இருக்கிறது, எனக்கு இது கிடைக்குமா என்று கேட்கிறார்கள்.

என்னுடைய செலவு மிகக் குறைவு தான். இது வெறும் மஞ்சள் கொம்பு மட்டும்தான். அதில் என்னுடைய உழைப்பு இருக்கிறது. அதில் அவர்கள் அணியும் பொழுது நான் பார்த்து மிகவும் சந்தோஷப்படுவேன்.

இதையும் படிங்க: 1st Vinayagar Temple: முழுமுதற் கடவுளின் முதல் கோவில்… பாண்டிய மன்னனின் யாகத்தில் அமர்ந்த விநாயகர்…

ஏழைகள் இதை பார்த்தால் மஞ்சள் பயிருடன், மஞ்சள் கொம்புடன் இது இருப்பது கொம்புடன் மிகவும் சந்தோஷப்படுவார்கள். உன்னுடைய சாதனைகளில் இதை நான் மனதார நேசிக்கிறேன்.

கல்யாணம் செய்ய வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் இது வேண்டும் என்று நினைத்தால் தாராளமாக என்னைத் தொடர்பு கொண்டு வாங்கிக் கொள்ளலாம். என்னுடைய சீர்வரிசையாக இதை நான் கொடுக்கிறேன். சீர்வரிசை என்பது பெரிய அளவில் கொடுக்க வேண்டும். ஆனால் இதில் என்னுடைய உழைப்பைப் போட்டுத் தருகிறேன்.

அவசரக் காலத்தில் இதை பயன்படுத்திக் கொள்ளலாம். பிறகு நீங்கள் வசதி வாய்ப்பு வந்த பிறகு உங்களுக்கு ஏற்ற அளவில் தங்கத்தின் மூலம் செய்து கொள்ளலாம். தங்கத்தில் நான் நிறைய வெரைட்டி பண்ணியிருக்கிறேன். ஆனால் மஞ்சளில் பண்ணும் பொழுது எனக்கு ஏதோ ஒரு நல்ல விஷயம் செய்து கொண்டிருக்கிறோம் என்று என் மனதில் செய்து கொண்டிருக்கிறான் என்று மஞ்சளும், மாங்கல்யத்தின் மூலம் நான் உணர்ந்தேன்.

இதையும் படிங்க: Ooty Mariamman Temple: டெக்னாலஜி பாஸ்… ஒரு நொடியில் கால் கழுவும் இயந்திரம்… கோவிலில் இப்படியொரு வசதியா…

இதில் எனக்கு காஸ்ட் என்று நான் எதுவும் யோசிக்கவில்லை. சம்பாதிக்க வேண்டும் என்று நான் நினைத்தால் சொக்கத் தங்கத்தில் தாலி என்று தான் எனக்குத் தோன்றியிருக்கும். இதை என்னிடம் எத்தனை பேர் வந்து கேட்டாலும் நான் இதை முற்றிலும் இலவசமாகத் தான் கொடுக்கப் போகிறேன். இதில் என்னுடைய உழைப்பைப் போட்டு கொடுப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

இதை செய்வதற்குத் தங்கத்தில் செய்வதை விட வேலைப்பாடு மிகவும் அதிகம். தங்கத்தில் தகட்டை ஒட்டி செய்து விடுவோம். மஞ்சள் என்கிற பொழுது அதை சரியாக வெட்ட வேண்டும். உள்ளே இருக்கும் வடிவுகள் மூலம் அது உடையக் கூடும். ஆகையால் இதை செய்வதற்குக் குறைந்தது மூன்று முதல் நான்கு மணி நேரம் தேவைப்படும். என்னுடைய உழைப்பு ஏழைக் குடும்பத்திற்குப் போய் சேர்கிறது என்பது எனக்குப் பெரிதும் ஆனந்தம் தான்” எனத் தெரிவித்தார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Location :

Coimbatore,Tamil Nadu

First Published :

April 12, 2025 4:08 PM IST

தமிழ் செய்திகள்/வணிகம்/

Mangalyam Without Gold: தங்கம் விலை எவ்வளவு ஏறினாலும் கவலையில்ல… மங்களகரமான தாலிக்கு இனி தங்கம் தேவையில்ல…

Read More

Previous Post

ஐபிஎல் 2025: ‘சேப்பாக்கம் மைதானம் பற்றி ரஹானேவுக்கும், மொயீன் அலிக்கும் தெரியும், அதனால்..’ -டி காக் பேட்டி

Next Post

Penderaan- pusat perlindungan diarah tutup | Makkal Osai

Next Post
Penderaan- pusat perlindungan diarah tutup | Makkal Osai

Penderaan- pusat perlindungan diarah tutup | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin