Last Updated:
அடுக்குமாடி குடியிருப்புகளில் மாதம் 7,500 ரூபாய்க்கு மேல் பராமரிப்பு தொகை செலுத்தினால் 18% ஜிஎஸ்டி கட்டாயம். ஆண்டு 20 லட்சம் ரூபாய் மேல் செலுத்தினால் 3.6 லட்சம் ரூபாய் ஜிஎஸ்டி.
அடுக்குமாடி குடியிருப்புகளில் மாதாந்திர பராமரிப்புத் தொகையாக 7ஆயிரத்து 500 ரூபாய்க்கு மேல் வசூலிக்கும்போது அதற்கு 18 விழுக்காடு வரி வசூலிக்கும் முறை அமலாகியுள்ளது.
அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்போருக்கான ஜிஎஸ்டி வசூலிக்கும் விதிகள் அண்மையில் மத்திய பட்ஜெட்டில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஒரு அபார்ட்மென்டில் மாதம் 7ஆயிரத்து 500 ரூபாய்க்கு மேல் பராமரிப்பு தொகை செலுத்தினால் அதற்கு ஜிஎஸ்டி வசூலிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஒரு அடுக்குமாடி குடியிருப்பு முழுமைக்கும் ஆண்டு பராமரிப்புத் தொகையாக 20லட்சம் ரூபாய்க்கு மேல் சென்றால் கட்டாயம் 18 விழுக்காடு ஜிஎஸ்டி செலுத்த வேண்டும்.
ரூ.20 லட்சம் ரூபாய் பராமரிப்புத் தொகையாக செலுத்தும்பட்சத்தில் அதற்கு ஆண்டு ஜிஎஸ்டியாக 3லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என்கிறார்கள் நிபுணர்கள்
இது தொடர்பாக கூடுதல் விவரம் தேவைப்படுவோர் அருகில் உள்ள வணிக வரித்துறை அலுவலகத்துக்கு சென்று தங்கள் அடுக்குமாடி குடியிருப்பின் நிலையை அறிந்து கொள்ள முடியும்.
April 12, 2025 8:50 AM IST


