bob ஸ்கொயர் டிரைவ் டெபாசிட் திட்டம் என்பது 444 நாட்கள் கால அளவுடன் வருகிறது. மேலும், இந்த திட்டத்திற்கு ஒரு வருடத்திற்கு பொதுமக்களுக்கு 7.15 சதவீத வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. சீனியர் சிட்டிசன்களைப் பொறுத்தவரை ஓராண்டுக்கு 7.65% அதிக வட்டி வழங்கப்படுகிறது. அதே சமயத்தில் சூப்பர் சீனியர் சிட்டிசன்களுக்கு இதைவிட சற்று அதிகமாக ஒரு வருடத்திற்கு 7.75% வட்டி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வரி சேமிப்பு ஃபிக்சட் டெபாசிட் திட்டங்கள்:
5 வருட கால டெபாசிட்களுக்கு வரி சேமிப்பு ஆப்ஷன்களை எதிர்பார்க்கும் கஸ்டமர்களுக்கு பேங்க் ஆஃப் பரோடா அற்புதமான வட்டி விகிதங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறது. பொதுமக்களுக்கு 6.80 சதவீத வட்டி விகிதமும், சீனியர் சிட்டிசன்களுக்கு 7.40% வட்டி விகிதமும், சூப்பர் சீனியர் சிட்டிசன்களுக்கு 7.50 சதவீத வட்டி விகிதமும் கொடுக்கப்பட்டு வருகிறது.
நீண்டகால சேமிப்பு இலக்குகளைப் பூர்த்தி செய்யும் அதே சமயத்தில் வருமான வரி சட்டத்தில் உள்ள பிரிவு 80C-ன் கீழ் வரி பலன்களையும் இத்திட்டம் வழங்குகிறது. வட்டி விகிதத்தில் ஏற்பட்ட மாற்றத்திற்குப் பிறகு பொதுமக்களுக்கான ஃபிக்சட் டெபாசிட் வட்டி விகிதங்களை, பேங்க் ஆஃப் பரோடா ஒரு ஆண்டுக்கு 4.25% முதல் 7.15 சதவீதம் வரை வழங்கி வருகிறது. இது 7 நாட்கள் முதல் 10 வருடங்கள் வரையிலான ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களுக்குப் பொருந்தும்.
7 நாட்கள் முதல் 14 நாட்கள் வரை: பொதுமக்கள் – 4.25% சீனியர் சிட்டிசன் – 4.75% சூப்பர் சீனியர் சிட்டிசன் – 4.75%
15 நாட்கள் முதல் 45 நாட்கள் வரை: பொதுமக்கள் – 4.5% சீனியர் சிட்டிசன் – 5% சூப்பர் சீனியர் சிட்டிசன் – 5%
46 நாட்கள் முதல் 90 நாட்கள் வரை: பொதுமக்கள் – 5.5% சீனியர் சிட்டிசன் – 6% சூப்பர் சீனியர் சிட்டிசன் – 6%
91 நாட்கள் முதல் 180 நாட்கள் வரை: பொதுமக்கள் – 5.6% சீனியர் சிட்டிசன் – 6.10% சூப்பர் சீனியர் சிட்டிசன் – 6.10%
181 நாட்கள் முதல் 210 நாட்கள் வரை: பொதுமக்கள் – 5.75% சீனியர் சிட்டிசன் – 6.25% சூப்பர் சீனியர் சிட்டிசன் – 6.25%
211 நாட்கள் முதல் 270 நாட்கள் வரை: பொதுமக்கள் – 6.25% சீனியர் சிட்டிசன் – 6.75% சூப்பர் சீனியர் சிட்டிசன் – 6.75%
271 நாட்களுக்கு மேல் 1 வருடத்திற்கும் குறைவாக: பொதுமக்கள் – 6.5% சீனியர் சிட்டிசன் – 7% சூப்பர் சீனியர் சிட்டிசன் – 7%
இதையும் படிக்க: ஆதார் என்ரோல்மென்ட் ID யூஸ் பண்ணி PAN கார்டு லிங்க் பண்ணி இருக்கீங்களா…? அப்போ இத கட்டாயம் செஞ்சிடுங்க…!
1 வருடம்: பொதுமக்கள் – 6.85% சீனியர் சிட்டிசன் – 7.35% சூப்பர் சீனியர் சிட்டிசன் – 7.35%
1 வருடத்திற்கு மேல் 400 நாட்களுக்குள்: பொதுமக்கள் – 7% சீனியர் சிட்டிசன் – 7.5% சூப்பர் சீனியர் சிட்டிசன் – 7.6%
400 நாட்களுக்கு மேல் 2 வருடங்கள் வரை (444 நாட்கள் தவிர): பொதுமக்கள் – 7% சீனியர் சிட்டிசன் – 7.5% சூப்பர் சீனியர் சிட்டிசன் – 7.6%
2 வருடத்திற்கு மேல் 3 வருடங்கள் வரை: பொதுமக்கள் – 7.15% சீனியர் சிட்டிசன் – 7.65% சூப்பர் சீனியர் சிட்டிசன் – 7.75%
3 வருடத்திற்கு மேல் 5 வருடங்கள் வரை: பொதுமக்கள் – 6.8% சீனியர் சிட்டிசன் – 7.40% சூப்பர் சீனியர் சிட்டிசன் – 7.50%
5 வருடத்திற்கு மேல் 10 வருடங்கள் வரை: பொதுமக்கள் – 6.5% சீனியர் சிட்டிசன் – 7.5% சூப்பர் சீனியர் சிட்டிசன் – 7.5%
10 வருடத்திற்கு மேல் (MACAD மட்டும்): பொதுமக்கள் – 6.25% சீனியர் சிட்டிசன் – 6.75% சூப்பர் சீனியர் சிட்டிசன் – 6.75%
இதையும் படிக்க: அரசுப் பணியில் உள்ள பெண் ஊழியர்களுக்கு பென்ஷன் சட்டத்தில் புதிய மாற்றம்…!
மேலும், இந்த விகிதங்கள் 3 கோடி ரூபாய்க்கும் குறைவான டெபாசிட்களுக்கு வழங்கப்படுகிறது. சீனியர் சிட்டிசன்களைப் பொறுத்தவரை ஓராண்டுக்கு 4.75% முதல் 7.65 சதவீதம் வரையிலான வட்டி வழங்கப்படுகிறது.
April 11, 2025 3:23 PM IST

