• Login
Saturday, April 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

பிருத்வி ஷா முதல் மயங்க் அகர்வால் வரை..! சிஎஸ்கே-வில் ருதுராஜ் கெய்க்வாடுக்கு பதில் விளையாட வாய்ப்புள்ள 3 வீரர்கள்

GenevaTimes by GenevaTimes
April 11, 2025
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
பிருத்வி ஷா முதல் மயங்க் அகர்வால் வரை..! சிஎஸ்கே-வில் ருதுராஜ் கெய்க்வாடுக்கு பதில் விளையாட வாய்ப்புள்ள 3 வீரர்கள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய 5 போட்டிகளில் 4 போட்டியில் சிஎஸ்கே அணி தோல்வியை சந்தித்துள்ளது. இந்த நிலையில் சென்னை ரசிகர்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர்.

இந்த நிலையில், சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் முழங்கை எலும்பு முறிவு காரணமாக நடப்பு தொடரிலிருந்து விலகியதாக அணியின் பயிற்சியாளர் பிளெம்மிங் தெரிவித்தார். இதனால் சென்னை அணிக்கு மீண்டும் கேப்டனாகி உள்ளார் எம்.எஸ்.தோனி.

ஆனால் ருதுராஜ் கெய்க்வாடுக்கு மாற்றாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றொரு பேட்ஸ்மேனை தேர்வு செய்ய முடியும்.

பிரித்வி ஷா: IPL 2025 மெகா ஏலத்தில் பிருத்வி ஷாவை யாரும் ஏலத்தில் எடுக்கவில்லை. ஆனால் அவர் இப்போது கெய்க்வாட்டுக்கு மாற்றாக CSK-வில் இணையலாம். மும்பையைச் சேர்ந்த 25 வயதான பிரித்வி ஷா, 2018 முதல் 2024 வரை டெல்லி கேபிடல்ஸ் அணியில் விளையாடினார். இதுவரை விளையாடிய 79 IPL போட்டிகளில், அவர் 1892 ரன்கள் எடுத்துள்ளார். முன்னாள் இந்திய U-19 கேப்டனான பிரித்வி ஷா, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அதிரடியான தொடக்கத்தை கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மயங்க் அகர்வால்: மயங்க் அகர்வால், ஐபிஎல் தொடரில் ஆர்சிபி, டெல்லி கேபிடல்ஸ், ரைசிங் புனே சூப்பர்ஜெயண்ட்ஸ், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ஹைதராபாத் அணிகளுக்காக விளையாடியுள்ளார். 2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு கேப்டனாகவும் இருந்தார். இதுவரை 127 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள மயங்க் அகர்வால், 2661 ரன்கள் எடுத்துள்ளார். ருதுராஜ் கெய்க்வாட்டைப் போலவே, மயங்க் அகர்வால் தொடக்க வீரராகவும், 3ஆவது பேட்ஸ்மேனாகவும் விளையாட முடியும்.

இதையும் படிக்க: IPL 2025-ல் அதிக சம்பளம் வாங்கும் டாப் 10 Gen-Z வீரர்கள்.. லிஸ்ட் இதோ!

ஆயுஷ் மத்ரே: 17 வயதான ஆயுஷ் மத்ரே மும்பையைச் சேர்ந்த வீரர். சமீபத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் அழைக்கப்பட்டார், எனவே ருதுராஜ் கெய்க்வாட்டின் மாற்றாக ஆயுஷ் மத்ரேவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தேர்வு செய்யும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இளம் வீரரான ஆயுஷ் மத்ரே, இதுவரை ஒன்பது முதல் தர போட்டிகளிலும் ஏழு லிஸ்ட் ஏ போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு முன்னதாக சிஎஸ்கேவால் ரூ.18 கோடிக்கு ருதுராஜ் தக்கவைக்கப்பட்டார். இந்த ஆண்டு விளையாடிய ஐந்து போட்டிகளில், இரண்டு அரைசதங்களின் உள்ளிட்டவைகளுடன், ருதுராஜ் கெய்க்வாட் 122 ரன்களை எடுத்துள்ளார்.

இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் 6ஆவது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்ளும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், ருதுராஜ் கெய்க்வாடுக்கு பதிலாக யார் இருக்கப்போகிறார்கள் என்பது முக்கிய கேள்வியாக உள்ளது.

First Published :

April 11, 2025 7:03 AM IST

Read More

Previous Post

’என் காது கேக்காது!’ ஆளுநரின் அதிகாரம் குறித்த கேள்விக்கு நாகலாந்து ஆளுநர் இல.கணேசன் பதில்!

Next Post

ஊழல் வழக்கில் மீண்டும் ஷேக் ஹசீனா, மகள் சைமாவுக்கு வங்கதேச நீதிமன்றம் கைது வாரன்ட் | Bangladesh court issues new arrest warrant against Sheikh Hasina, her daughter in graft case

Next Post
ஊழல் வழக்கில் மீண்டும் ஷேக் ஹசீனா, மகள் சைமாவுக்கு வங்கதேச நீதிமன்றம் கைது வாரன்ட் | Bangladesh court issues new arrest warrant against Sheikh Hasina, her daughter in graft case

ஊழல் வழக்கில் மீண்டும் ஷேக் ஹசீனா, மகள் சைமாவுக்கு வங்கதேச நீதிமன்றம் கைது வாரன்ட் | Bangladesh court issues new arrest warrant against Sheikh Hasina, her daughter in graft case

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin