Last Updated:
பாகிஸ்தான் தான் இந்தியாவில் பயங்கரவாதத்தை பரப்புவதாக இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், குற்றம்சாட்டினார்.
இந்தியாவில் பயங்கரவாத நடவடிக்கைகளை பாகிஸ்தான் பரப்புவதாக இந்திய வெளியுறவு அமைச்சர் கடுமையாக சாடியுள்ளார். மேலும் ஒரு நாடு “பயங்கரவாதத் தொழிலை” தொடங்கினால், அது நிச்சயமாக அதே தொழிலால் விழுங்கப்படும் என்றும் கூறினார்.
நியூஸ் 18 குழுமம் டெல்லியில் “ரைசிங் பாரத்” என்ற மாநாட்டை நடத்தி வருகிறது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், திரை பிரபலங்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டுள்ளனர்.
“ரைசிங் பாரத்” மாநாட்டில் மொத்தம் 75 அமர்வுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட விஐபிகள் பேசுகிறார்கள். செயற்கை நுண்ணறிவு, உலக அரசியல், பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் இந்த “ரைசிங் பாரத்” மாநாட்டில் கருத்துரை வழங்கப்பட உள்ளது.
இந்த மாநாட்டில் பேசிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், “பாகிஸ்தானில் உள்ள மக்கள் இந்தியாவில் பயங்கரவாத செயல்களை நடத்தி வருவதாக வெளிப்படையாக “பெருமையுடன்” கூறுகின்றனர்” என்று அவர் கூறினார்.
மேலும் அவர் பேசும்போது, “இதுகுறித்து அனைவருக்கும் வெளிப்படையாகத் தெரியும். அவர்களும் அதைச் சொல்கிறார்கள். நான் ஒரு குற்றச்சாட்டை முன்வைக்கவில்லை, பாகிஸ்தானில் உள்ள அனைவரும் அதை மறுக்கிறார்கள். இந்தியாவில் பயங்கரவாதச் செயல்களைச் செய்வதாக வெளிப்படையாக அறிவிக்கும் மக்கள் பாகிஸ்தானில் உள்ளனர். இது ஒரு கற்பனை அல்ல. அவர்கள் பெருமையுடன் கூறும் ஒன்றுதான். நீங்கள் ஒரு பயங்கரவாதத் தொழிலைத் தொடங்கினால், நீங்கள் அதனால் விழுங்கப்படுவீர்கள் என்று அனைத்து விவேகமுள்ள மக்களும் கூறி வருகின்றனர். இன்று நாம் அதைத்தான் பார்க்கிறோம்,” என்று நியூஸ்18 ரைசிங் பாரத் உச்சி மாநாட்டில் கூறினார்.
இதுகுறித்து மேலும் பேசிய அவர், “நாம் காலையில் நன்றாக நடந்து கொண்டு, இரவில் திடீரென நான் உங்கள் வீட்டைத் தாக்கினால் நீங்கள் கவலைப்பட மாட்டீர்களா? அதனுடன் நீங்கள் வாழ்வீர்களா?” என்று அமைச்சர் கேட்டார்.
மேலும் 26/11 மும்பை பயங்கரவாத குற்றவாளி தஹாவூர் ராணாவை அமெரிக்காவிலிருந்து நாடு கடத்துவது குறித்து கேட்டபோது, அமெரிக்க சட்ட நடைமுறையின் முடிவை இந்தியா வரவேற்பதாக ஜெய்சங்கர் கூறினார். “தஹாவூர் ராணா பிரச்சினையில் புதிதாகச் சேர்க்க எதுவும் இல்லை. அமெரிக்க சட்ட நடைமுறையின் முடிவை நாங்கள் வரவேற்கிறோம்,” என்று அவர் கூறினார்.
April 09, 2025 2:46 PM IST
“பாகிஸ்தானில் உள்ளவர்களே ஒப்புக்கொள்வார்கள்…” – ரைசிங் பாரத் மாநாட்டில் அமைச்சர் ஜெய் சங்கர் பேச்சு


