• Login
Tuesday, March 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

பில்கேட்ஸிடம் தனது உடல்நல ரகசியத்தை கூறிய மோடி.. என்ன தெரியுமா? – News18 தமிழ்

GenevaTimes by GenevaTimes
March 30, 2024
in இந்தியா
Reading Time: 1 min read
0
பில்கேட்ஸிடம் தனது உடல்நல ரகசியத்தை கூறிய மோடி.. என்ன தெரியுமா? – News18 தமிழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இந்திய பிரதமர் மோடி மற்றும் உலகின் பிரபல தொழில் அதிபர் பில்கேட்ஸ் பிரதமர் இல்லத்தில் உரையாடிய வீடியோ இன்று வெளியானது.

பிப்ரவரி 2024 இல் தனது கடைசி இந்திய பயணத்தின் போது, பில் கேட்ஸ் பல உள்ளூர் மற்றும் உலகளாவிய பிரச்சினைகளைப் பற்றி விவாதித்ததாகவும், டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு, பெண்கள் தலைமையிலான மேம்பாட்டை கவனித்ததாகவும் கூறியுள்ளார். ஏஐ புரட்சி, தொழில்நுட்பத் தலைவராக இந்தியாவின் திறன் மற்றும் பலவற்றைப் பற்றி பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரபல தொழில் அதிபரும், மைக்ரோசாப்ட் நிறுவனருமான பில் கேட்ஸ் ஆகியோர் உரையாடினர். இந்த காணொளி இன்று (வெள்ளிக்கிழமை) ஒளிபரப்பானது.

விளம்பரம்

அதில் பேசிய பிரதமர் மோடி, தனது உடல்நிலை குறித்து சில சுவாரஸ்யங்களை தெரிவித்துள்ளார். விடிவதற்கு முன்பே எழுந்து யோகா செய்துவிட்டு, கதா டீ குடிப்பார். இந்த டீ தான் தன் ஆரோக்கியத்தை அதிகரித்து வருவதாக தெரிவித்தார்.

கொரோனா தொற்று இந்தியாவில் பரவிய போது, இந்த கதா டீயை குடிக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியது. அப்போது நானும் இதை குடிக்கிறேன் என மக்களுக்கு சொன்னேன். கதா என்பது ஆயுர்வேத மூலிகைகளிலிருந்து தயாரிக்கப்படும் தேநீர் போன்ற மருந்து என்றே சொல்லலாம். இது இமயமலை மூலிகைகள் மூலம் தயாரிக்கப்படுகிறது. இதில் துளசி இலைகள், இலவங்கப்பட்டை, கருப்பு மிளகு, கொத்தமல்லி, திராட்சை மற்றும் ஏலக்காய் உள்ளது. இவை அனைத்திற்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை உள்ளது. நோய்களைக் குணப்படுத்தும் ஆற்றல் இதற்கு உண்டு. அதனால் தினமும் ஒரு முறை குடித்து வந்தால்… பல்வேறு நோய்களில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளலாம். இந்த பானத்தை குடித்தால்… தொற்று நோய் வராது. செரிமானம் மேம்படும். உடல் நச்சுக் கழிவுகளை வெளியேற்றுகிறது என கூறினார்.

விளம்பரம்

தேவையான பொருட்கள்:

துளசி இலைகள் – 1 டீஸ்பூன், ஏலக்காய் – 1 டீஸ்பூன், இலவங்கப்பட்டை – 1 டீஸ்பூன், இஞ்சி – 1 டீஸ்பூன், கருப்பு மிளகு – 1 டீஸ்பூன், சிறிது திராட்சை, தண்ணீர் – 2 முதல் 3 கப், தேன் அல்லது வெல்லம் (இது. விருப்பமானது), சிறிது புதிய எலுமிச்சை சாறு.

கதா பானம் தயாரிப்பது எப்படி:

முதலில் கருப்பு மிளகு மற்றும் இலவங்கப்பட்டையை நன்றாக பொடியாக நறுக்கவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும். துளசி இலைகளை சேர்த்து, 5 நிமிடம் சிம்மில் வைக்கவும். இப்போது கருப்பு மிளகு மற்றும் இலவங்கப்பட்டை தூள் சேர்க்கவும். உடனே இஞ்சியை சேர்த்து தண்ணீர் கொதிக்க விடவும். இப்போது தண்ணீர் பாதியாகக் குறைந்த பிறகு திராட்சையும் சேர்த்துக் கொள்ளலாம். இறுதியில் தேன் அல்லது வெல்லம் சேர்த்து எலுமிச்சை சாறு சேர்க்கவும்.

விளம்பரம்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…

Read More

Previous Post

மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் சவுதி அரேபிய மாடல் பங்கேற்பு

Next Post

LSG vs PBKS | பஞ்சாப் கிங்ஸை வேகத்தால் சாய்த்த மயங்க் யாதவ்; லக்னோ 21 ரன்களில் வெற்றி | Mayank Yadav pace beats Punjab Kings and lsg won by 21 runs

Next Post
LSG vs PBKS | பஞ்சாப் கிங்ஸை வேகத்தால் சாய்த்த மயங்க் யாதவ்; லக்னோ 21 ரன்களில் வெற்றி | Mayank Yadav pace beats Punjab Kings and lsg won by 21 runs

LSG vs PBKS | பஞ்சாப் கிங்ஸை வேகத்தால் சாய்த்த மயங்க் யாதவ்; லக்னோ 21 ரன்களில் வெற்றி | Mayank Yadav pace beats Punjab Kings and lsg won by 21 runs

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin