மியான்மரில் உள்ள ஐ.நா. மனிதாபிமான விவகார ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் (OCHA) தலைவர் சஜ்ஜாத் முகமது சாஜித் கூறுகையில், “ஆபரேஷன் ராமா”வின் கீழ் இந்தியா விரைவாக வளங்களை பயன்படுத்தியதையும், பேரழிவு ஏற்பட்ட சில நாட்களுக்குள் உணவு, மருத்துவப் பொருட்கள் மற்றும் மருத்துவமனை ஆதரவு உட்பட 1,000 மெட்ரிக் டன்களுக்கும் அதிகமான மனிதாபிமான உதவிகளை வழங்கியதையும் பாராட்டினார்.
“வளங்கள் மற்றும் வசதிகளை முன்கூட்டியே பயன்படுத்தியது, குறிப்பாக மண்டலேயின் நகர்ப்புறங்களில் பலருக்கு உதவியது” என்றும், மிக மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உதவ இந்தியா 200 பேர் கொண்ட தேடல் மற்றும் மீட்புக் குழுவையும் மருத்துவப் பணியாளர்களையும் அனுப்பியதாகவும் சஜித் குறிப்பிட்டார். மண்டலேயில் ஒரு அவசர மருத்துவமனையை நிறுவுவது மிகவும் முக்கியமானது. ஏனெனில், பல உள்ளூர் மருத்துவமனைகள் மற்றும் அறுவை சிகிச்சை அரங்குகள் செயல்படாமல் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மியான்மரின் மண்டலே அருகே மையம் கொண்ட இந்த நிலநடுக்கம், நினைத்துப் பார்க்க முடியாத பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக குறைந்தது 3,500 பேர் இறந்துள்ளனர். 5,000 பேர் காயமடைந்துள்ளனர். மேலும், 200 பேர் இன்னும் காணவில்லை என சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிலநடுக்கத்தால் 17 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா. சபை மதிப்பிட்டுள்ளது. மேலும், 9 மில்லியனுக்கும் மேற்பட்டோர் கடுமையான நிலநடுக்க அதிர்ச்சிகளை அனுபவித்துள்ளனர். இந்தப் பேரழிவு மொத்தமுள்ள மியான்மரின் 330 நகரங்களில் 58-ல் உள்கட்டமைப்பை சேதப்படுத்தியுள்ளது. மேலும், உள்நாட்டு மோதல்கள் மற்றும் சேதமடைந்த சாலைகள், பாலங்கள் மற்றும் விமான நிலையங்கள் போன்ற தளவாடத் தடைகளால் தற்போதைய சவால்களை இன்னும் அதிகப்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: “சாப்பாட்டில் விஷம் வைத்துவிடுவார்கள்..” காதலனுக்கு வாட்ஸ்அப் மெசேஜ்.. சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!
“நாங்கள் இந்தியா உள்ளிட்ட உறுப்பு நாடுகளுடன் தொடர்பில் இருக்கிறோம். வரலாற்று உறவுகளைக் கொண்ட அண்டை நாடாக இருப்பதால், மியான்மரில் மக்களின் வாழ்க்கையையும், வாழ்வாதாரத்தையும் மீண்டும் கட்டியெழுப்புவதில் இந்தியா மிக முக்கியப் பங்கு வகிக்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன். இதற்கு நீண்டகால ஆதரவு தேவைப்படும்” என்று சாஜித் கூறினார். குஜராத் மற்றும் காஷ்மீரில் ஏற்பட்ட பூகம்பங்களைத் தொடர்ந்து வெற்றிகரமான மீட்பு முயற்சிகளை மேற்கோள்காட்டி, பேரழிவுக்குப் பிந்தைய மறுகட்டமைப்பில் இந்தியாவின் அனுபவத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஆபரேஷன் பிரம்மா
நெருக்கடியில் இருக்கும் மியான்மருக்கு உதவ இந்தியா ‘ஆபரேஷன் பிரம்மா’வைத் தொடங்கியுள்ளது. தளவாடச் சவால்கள் ஒரு பெரிய தடையாகவே உள்ளன. சேதமடைந்த பாலங்கள் மற்றும் ஒழுங்குபடுத்தப்பட்ட போக்குவரத்து ஆகியவை உதவி விநியோகத்தில் தாமதத்தை ஏற்படுத்துகின்றன.
மண்டலேயில், ஆரம்ப நிலநடுக்கத்திற்குப் பிறகு 1,000-க்கும் மேற்பட்ட நில அதிர்வுகள் பதிவானதைத் தொடர்ந்து, மீண்டும் நிலநடுக்கம் ஏற்படுமோ என்ற அச்சத்தில் குடியிருப்பாளர்கள் இன்னும் சாலைகளில் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
இதையும் படிக்க: “எக்ஸ்கியூஸ் மீ” என கூறியது ஒரு குத்தமா?.. மராத்தியில் பேச சொல்லி இரு பெண்களை அடித்து உதைத்த கும்பல்!
மண்டலே மற்றும் சகெய்ன் நகரங்களை இணைக்கும் புதிய பாலம் உடைந்து போனது நிவாரண முயற்சிகளை மேலும் சிக்கலாக்கியுள்ளது. இருப்பினும், பழைய பாலம் கடுமையான சுமை கட்டுப்பாடுகளின் கீழ் ஓரளவிற்கு செயல்பாட்டில் உள்ளது.
நிதிரீதியாக, உடனடி நிவாரணம் மற்றும் நீண்டகால மீட்சிக்கான நிதியைப் பெறுவதற்கு ஐ.நா.வும் அதன் கூட்டாளிகளும் போராடி வருகின்றனர். 20 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு உதவி தேவைப்படும் நிலையில், இது நெருக்கடியை இன்னும் அதிகப்படுத்துகிறது.
April 10, 2025 10:05 PM IST
மியான்மர் நிலநடுக்க மீட்பு நடவடிக்கைகளில் முக்கியப் பங்கு வகிக்கும் இந்தியா: ஐ.நா.சபை பாராட்டு…!

