தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள சின்ன ஓவுலாபுரத்தில் உள்ள ஒயின் தயாரிக்கும் தொழிற்சாலையில் கம்பம் சுற்று வட்டார பகுதிகளில் கருப்பு திராட்சை விவசாயம் செய்யும் விவசாயிகளிடம் பழங்களை கொள்முதல் செய்வது பற்றி கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் தாங்கள் தோட்டங்களில் விளைவிக்கும் திராட்சை பழங்களை ஆண்டு முழுவதும் ஒயின் தொழிற்சாலை நிர்வாகத்தினர்.
இடைத்தரகர்கள் இன்றி பருவ காலங்களுக்கு ஏற்றார் போல் உரிய விலை கொடுத்து எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்ட காலத்திற்குள் விவசாயிகளுக்கு தரவேண்டிய தொகைகளை விரைந்து வழங்கிட வேண்டும் என்றும் தற்போது ஒரு கிலோ திராட்சைக்கு நிர்ணயம் செய்துள்ள ரூபாய் 23 விலையை விட 25 ரூபாய் விலையை நிர்ணயம் செய்து வழங்கவேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை விடுத்தனர்.
இதற்கு தனியார் திராட்சை தொழிற்சாலை நிர்வாகத்தினர் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் இடைத்தரவர்கள் இன்றி நேரடியாக விவசாயிகளை பழத்தை கொண்டு வந்து விற்பனை செய்யலாம் என தகவல் தெரிவித்தனர்.
இந்த கருத்து கேப்பு கூட்டத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட திராட்சை விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)