இவரது படைப்புகள் ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், மலையாளம், ஹிந்தி, வங்காளம், தெலுங்கு, கன்னடம், அரபு, ஸ்பானிஷ் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி உள்ளன. வரும் மே ஒன்றாம் தேதி அன்று கொல்கத்தாவில் நடைபெற உள்ள விழாவில் பாரதிய பாஷா விருது வழங்கப்பட உள்ளது. ஏற்கெனவே இந்த விருதை கடந்த 2013ஆம் ஆண்டு எழுத்தாளர் அசோக மித்ரனும், 2009ஆம் ஆண்டு வைரமுத்துவும், 2018ஆம் ஆண்டு மாலன் நாராயணனும் பெற்று உள்ளனர்.

