தில்லியிலுள்ள செங்கோட்டை மற்றும் ஜாமா மசூதிக்கு வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்புப் படையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
தில்லியிலுள்ள புகழ்பெற்ற செங்கோட்டை மற்றும் ஜாமா மசூதிக்கு இன்று (ஏப்.10) காலை செல்போன் வாயிலான மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து, இந்திய பாதுகாப்புப் படையினர் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் அங்கு சென்று அந்த இரண்டு கட்டடங்களிலும் அதனைச் சுற்றியுள்ள வளாகத்திலும் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
இந்நிலையில், அவர்கள் மேற்கொண்ட சோதனையின் முடிவில் வெடிகுண்டுகள் எதுவும் கண்டறியப்படாததினால் மர்ம நபர் விடுத்த வெடிகுண்டு மிரட்டல் போலியானது என உறுதி செய்யப்பட்டுள்ளது.

