• Login
Wednesday, April 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

அற்புதமாக வீசும் பிரசித் கிருஷ்ணா – குஜராத் டைட்டன்ஸின் பலம்! | IPL 2025: Prasit Krishna amazing bowling Gujarat Titans strength

GenevaTimes by GenevaTimes
April 10, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
அற்புதமாக வீசும் பிரசித் கிருஷ்ணா – குஜராத் டைட்டன்ஸின் பலம்! | IPL 2025: Prasit Krishna amazing bowling Gujarat Titans strength
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


குஜராத் டைட்டன்ஸ் அணி சாய் சுதர்சன், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜினால் மீண்டும் ஒரு வெற்றியைச் சாதித்துள்ளது. அகமதாபாத்தில் 58 ரன்கள் வித்தியாசத்தில் அதிரடி ராஜஸ்தானை வீழ்த்தி குஜராத் தன் 4-வது வெற்றியை ஈட்டி 8 புள்ளிகளுடன் அட்டவணையில் முதலிடத்தில் உள்ளது.

217 ரன்களுக்கு எதிராக ராஜஸ்தான் சரியாகத் தொடங்கவில்லை. ஜெய்ஸ்வால் அவசரக்குடுக்கைத் தனமாக அர்ஷத்தின் பந்தை ஸ்லாஷ் செய்து டீப் தேர்ட்மேனில் கேட்ச் ஆனார். நிதிஷ் ராணாவும் அவ்வகையிலேயே அவுட் ஆனார், ஆனால் பவுலர் இந்த முறை சிராஜ். உடனேயே சஞ்சுவும் ரியான் பராகும் எதிர்த்தாக்குதல் இன்னிங்சை ஆடி 48 ரன்களை விரைவில் எடுத்தனர். பராக் 26 ரன்களில் கேஜ்ரோலியாவிடம் வெளியேறினார்.

ரஷீத் கான் இந்தப் போட்டிக்கு முன்னால் 1 விக்கெட்டை மட்டுமே கைப்பற்றியிருந்தார், ஆனால் நேற்று முதல் ஓவரிலேயே விக்கெட் வீழ்த்தினார். அதுவும் ஷார்ட் பிட்ச் பந்துதான் துருவ் ஜுரல் வாரிக்கொண்டு அடிக்கப் போய் டீப் மிட்விக்கெட்டில் கேட்ச் ஆனார். ஹெட்மையரை முதல் பந்திலேயே எல்பியில் வெளியேற்றியிருப்பார் ரஷீத் கான் ஆனால் பந்து சற்றே லெக் ஸ்டம்புக்கு வெளியே பிட்ச் ஆனது.

இந்த வாய்ப்பைப் பயன்படுத்திய ஹெட்மையர் ரஷித் கானை வாங்கி விட்டார் வாங்கி… 12 பந்துகளில் 26 ரன்களை விளாசினார். இதில் 2 நான்குகள் மற்றும் 2 சிக்சர்கள். இம்பாக்ட் வீரர் ஷுபம் துபேயையும் ரஷீத் கான் வீழ்த்தினார்.

பிரசித் கிருஷ்ணா குஜராத் டைட்டன்ஸின் ஒரு சக்தியாகத் திகழ்கிறார். மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக அந்த அணி இவரது பந்தின் பவுன்சை எதிர்கொள்ள முடியாது திணறி 2 விக்கெட்டுகளைக் கொடுத்தனர், அன்று 4 ஓவர் 18 ரன் 2 விக்கெட். நேற்று பிரசித் 4 ஓவர் 24 ரன்கள் மூன்று விக்கெட். நேற்றும் பந்து எகிறியது, குட் லெந்திலிருந்து எகிறுகிறது.

மிடில் ஓவர் தாதாவாக மாறி வருகிறார் பிரசித் கிருஷ்ணா, அனைத்திற்கும் மேலாக இங்கிலாந்து தொடரில் பிரசித் கிருஷ்ணா லெவனில் இடம்பெற பெரும் தகுதியுடையவராக இருக்கிறார், ஷமிக்குப் பதில் பிரசித் முன்னோக்கப்படுவார் என்றே தெரிகிறது.

சாம்சனை தன் ஸ்டீப் பவுன்ஸ் மூலம் முதலில் வீட்டுக்கு அனுப்பினார் பிரசித் கிருஷ்ணா. ஆர்ச்சரையும் தன் வேகத்தில் மிட் ஆஃபில் கேட்ச் கொடுக்கச் செய்தார். ஹெட்மெயர் டீப் பேக்வர்ட் ஸ்கொயர்லெக்கில் கேட்ச் ஆனார், இரண்டுமே ஷார்ட் பிட்ச் எகிறு பந்துகள். அத்துடன் ராஜஸ்தானின் முடிவும் ஆணியறையப்பட்டு விட்டது.

பிரசித் கிருஷ்ணா பந்து வீச்சைப் பார்க்கும் போது பாகிஸ்தானின் முகமது ஆசிப் போல் உள்ளது, ஆசிப் பவுன்ஸ்டுடன் பந்தை ஸ்விங் செய்வதிலும் பழைய பந்தில் கட்டர்ஸ் வீசுவதிலும் பந்தை தோள்பட்டைக்கு மேல் உடல் நோக்கி வீசி பெரிய பெரிய பேட்டர்களை திணறடித்தவர்.

பிரசித் கிருஷ்ணாவின் ஆக்‌ஷன் ஆக்ரோஷம் அனைத்திற்கும் மேலாக பொறுமை, வேகத்துடன் விவேகமும் அவரை ஆசிப் ரக பவுலராகவே நம்மை ஒப்பிட வைக்கிறது. இதே ஃபார்மை அவர் தொடர் முயற்சியாக இங்கிலாந்துக்குக் கொண்டு சென்றால் இங்கிலாந்து அணியின் பாஸ்பால் ஆட்டம் இன்னொரு பின்னடைவைச் சந்திக்கும் என்பது உறுதி.



Read More

Previous Post

Anbumani: இரண்டாக உடைகிறதா பாமக? அன்புமணி நீக்கத்திற்கு பொருளாளர் எதிர்ப்பு! திண்டிவனத்தில் போராட்டம்!

Next Post

ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி 0.25% குறைத்தது: வீடு, வாகன கடன் வட்டி குறைய வாய்ப்பு | Reserve Bank cuts repo interest rate by 0.25%

Next Post
ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி 0.25% குறைத்தது: வீடு, வாகன கடன் வட்டி குறைய வாய்ப்பு | Reserve Bank cuts repo interest rate by 0.25%

ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி 0.25% குறைத்தது: வீடு, வாகன கடன் வட்டி குறைய வாய்ப்பு | Reserve Bank cuts repo interest rate by 0.25%

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin