• Login
Wednesday, April 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

IPL 2025-ல் அதிக சம்பளம் வாங்கும் டாப் 10 Gen-Z வீரர்கள்.. லிஸ்ட் இதோ!

GenevaTimes by GenevaTimes
April 10, 2025
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
IPL 2025-ல் அதிக சம்பளம் வாங்கும் டாப் 10 Gen-Z வீரர்கள்.. லிஸ்ட் இதோ!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஐபிஎல் 2025 – அதிக சம்பளம் வாங்கும் Gen-Z வீரர்கள்: பல Gen-Z கிரிக்கெட் வீரர்கள் ஐபிஎல் 2025 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளனர். இது அவர்களின் திறமை மற்றும் வளர்ச்சியை குறிக்கிறது என்றே சொல்லலாம். ஐபிஎல் வரலாற்றில் மிகவும் விலையுயர்ந்த வீரரான ரிஷப் பந்த், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸால் ரூ.27 கோடிக்கு ஏலத்தல் எடுக்கப்பட்டார். அதேபோல், பஞ்சாப் கிங்ஸ் அணியால் ரூ.26.75 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட ஷ்ரேயாஸ் ஐயர், அதற்கு அடுத்த இடத்தில் உள்ளார். மேலும், ரூ.16.5 கோடி சம்பளத்துடன், குஜராத் டைட்டன்ஸ் ஷுப்மான் கில்லை தக்க வைத்துக் கொண்டுள்ளது. இது அவரது திறனையும் நிலையான செயல்திறனையும் காட்டுகிறது.

ஆல்ரவுண்டரான ரஷீத் கான், குஜராத் டைட்டன்ஸ் அணியில் ரூ.18 கோடிக்கு தக்கவைக்கப்பட்டார். இதேபோன்று மற்ற குறிப்பிடத்தக்க Gen-Z வீரர்களான இஷான் கிஷன் மற்றும் பிருத்வி ஷா ஆகியோர் குறிப்பிடத்தக்க ஒப்பந்தங்களைப் பெற்றுள்ளனர். இது, இந்த ஐபிஎல் 2025 இளம் வீரர்களின் திறமைகளை நம்பியிருப்பதை பிரதிபலிக்கிறது.

ரிஷப் பந்த் (வயது: 27): இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன்களில் ஒருவர் ஆவார். ஐபிஎல் 2025இல் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக விளையாடுகிறார். ரூ.27 கோடிக்கு ஏலத்தல் எடுக்கப்பட்ட இவர், பணக்கார Gen-Z கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக இருக்கிறார்.

ஷுப்மன் கில் (வயது: 25): குஜராத் டைட்டன்ஸ் அணியின் ஸ்டைலிஷ் தொடக்க வீரரான ஷுப்மான் கில், இளைஞர்களின் ஐகானாக மாறியுள்ளார். போட்டியில் அவரது அமைதியான அணுகுமுறை மற்றும் போட்டியில் வெல்லும் திறமை அவரை ஐபிஎல் 2025இல் அதிக சம்பளம் வாங்கும் இளம் நட்சத்திரங்களில் ஒருவராக மாற்றி உள்ளது.

Also Read: பயிற்சியில் சந்தித்த 8 பந்துகள் மட்டும் தான்.. இரவு 3 மணி வரை தூக்கமில்லை – ஐபிஎல் ஹீரோ பிரியான்ஷ் ஆர்யா!

அர்ஷ்தீப் சிங் (வயது: 26): அர்ஷ்தீப் சிங் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஆவார். டெத் ஓவர்களில் பந்துவீச்சுக்கு பெயர் பெற்ற இவர், பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடுகிறார். இவரது நிலையான செயல்திறன் மற்றும் புத்திசாலித்தனமான பந்துவீச்சு காரணமாக, Gen-Z கிரிக்கெட் வீரர்களில் இவரும் இடம் பிடித்திருக்கிறார்.

ரஷீத் கான் (வயது: 26): ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ரஷீத் கான், டி20 சூப்பர் ஸ்டார் என்றே சொல்லலாம். குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடும் இவர், ஒரு சிறந்த பந்து வீச்சாளர் மட்டுமின்றி, 2025 IPL-இல் பணக்கார வெளிநாட்டு வீரர்களில் ஒருவராகவும் இருக்கிறார்.

திலக் வர்மா (வயது: 22): மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் திலக் வர்மா. தனது பேட்டிங்கின் மூலம்  அனைவரையும் கவர்ந்துள்ளார். அவரது வலுவான ஆட்டம் இந்த IPL-இல் அவருக்கு நல்ல சம்பளத்தை பெற்றுத் தந்துள்ளது.

நேஹல் வதேரா (வயது: 24): பஞ்சாபைச் சேர்ந்த இளம் பேட்ஸ்மேனான நேஹல் வதேரா, தனது ஆக்ரோஷமான பேட்டிங்கின் மூலம் அனைவரையும் கவர்ந்து வருகிறார். பஞ்சாப் அணிக்காக விளையாடும் இவர், இந்திய கிரிக்கெட்டில் ஒரு நம்பிக்கைக்குரிய பெயராக மாறி வருகிறார்.

ஆசுதோஷ் சர்மா (வயது: 26): ஆஷுதோஷ் சர்மா IPL 2025இல் வளர்ந்து வரும் ஒரு இளம் வீரராக உள்ளார். அவரது நிலையான செயல்திறன் மற்றும் திறமைகளால், இந்த லீக்கில் அதிக வருவாய் ஈட்டும் Gen-Z வீரர்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.

பிரியான்ஷ் ஆர்யா (வயது: 24): பிரியான்ஷ் ஆர்யா தனது ஃபீல்டிங் திறமைக்காக அறியப்பட்ட ஒரு திறமையான இளம் வீரர் ஆவார். உள்நாட்டு மற்றும் ஐபிஎல் போட்டிகளில் அவரது செயல்திறன் அவருக்கு நல்ல அங்கீகாரத்தையும் வெகுமதிகளையும் பெற்றுத் தந்துள்ளன.

ஜீஷான் அன்சாரி (வயது: 25): ஜீஷான் அன்சாரி ஒரு லெக்-ஸ்பின்னர். தனது தனித்துவமான வேரியேஷன்களால் கவனத்தை ஈர்த்துள்ளார். ஐபிஎல் 2025இல் கவனிக்க வேண்டிய இளம் பந்து வீச்சாளர்களில் ஜீஷான் அன்சாரியும் ஒருவர் ஆவார்.

அஸ்வனி குமார் (வயது: 23): வேகம் மற்றும் ஸ்விங்கிற்கு பெயர் பெற்ற வேகப்பந்து வீச்சாளரான அஸ்வனி குமார், இந்த IPL-இல்   ஒரு மதிப்புமிக்க Gen-Z வீரராக தன்னை காட்டியுள்ளார்.

விக்னேஷ் புத்தூர் (வயது: 24): விக்னேஷ் புதூர் ஒரு துடிப்பான ஆல்ரவுண்டர் ஆவார். ஐபிஎல் 2025இல் தனது செயல்திறன் மூலம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார். இவரும் Gen-Z வீரர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.

First Published :

April 10, 2025 1:24 PM IST

Read More

Previous Post

“எக்ஸ்கியூஸ் மீ” என கூறியது ஒரு குத்தமா?.. மராத்தியில் பேச சொல்லி இரு பெண்களை அடித்து உதைத்த கும்பல்!

Next Post

வா்த்தகப் பதற்றம்: சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு!

Next Post
வா்த்தகப் பதற்றம்: சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு!

வா்த்தகப் பதற்றம்: சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin