April 10, 20259:36 AM IST
Tamil Live Breaking News : ‘Good Bad Ugly’ ரிலீஸ் ஆனது!
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘குட் பேட் அக்லி’. இந்தப் படத்தில் த்ரிஷா, அர்ஜுன் தாஸ், பிரசன்னா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ள இப்படம் இன்று ரிலீஸாகியுள்ளது. இதையடுத்து திரையரங்குகளில் அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

