ராஜஸ்தான் ராயல்ஸ் சேஸிங்
முன்னதாக, டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் பவுலிங்கை தேர்வு செய்ய, சாய் சுதர்சன் அரைசதம் மற்றும் படலர், ஷாருக்கான் அதிரடியால் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 217 ரன்கள் குவித்தது. இதையடுத்து மிக பெரிய இலக்கை சேஸ் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 19.2 ஓவரில் 159 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. இதனால் குஜராத் அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் புள்ளிப்பட்டியலிலும் முதல் இடத்துக்கு முன்னேறியது.

