Last Updated:
Repo Rate | ரெப்போ விகிதத்தை 0.25% குறைத்து 6% ஆக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) இன்று (ஏப்ரல் 9) ரெப்போ விகிதத்தை 0.25% குறைத்துள்ளது. அதன்படி புதிய ரெப்போ விகிதம் 6% ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரெப்போ விகிதம் என்ன?
ரெப்போ விகிதம் என்பது வங்கிகள் ரிசர்வ் வங்கியிலிருந்து கடன் பெறும் போது செலுத்தும் வட்டி விகிதமாகும். ரெப்போ விகிதம் குறைக்கப்படும் போது, வங்கிகள் குறைந்த வட்டி விகிதத்தில் கடன் பெற முடியும். ரெப்போ விகிதம் குறைந்தால், வங்கிகள் பொதுமக்களுக்கு வழங்கும் கடன்களின் வட்டி விகிதத்தையும் குறைக்கும்.
ரெப்போ விகிதத்தால் யாருக்கு பாதிப்பு?
ரெப்போ விகிதம் மாற்றத்தின் மூலம் இரண்டு பிரிவு மக்கள் நன்மைகளை பெற முடியும்:
1. மிதக்கும் வட்டி விகிதக் கடன்கள்: வங்கிகள் ரெப்போ விகிதத்தை அடிப்படையாகக் கொண்டு அவ்வப்போது EMI களை மாற்றியமைக்கும். ரெப்போ விகிதம் குறைந்ததால், மிதக்கும் வட்டி விகிதத்தில் இருக்கும் வீட்டுக் கடன், தனிநபர் கடன் போன்றவற்றின் EMIகள் குறையும்.
2. புதிய கடன் வாங்குபவர்கள்: ரெப்போ விகிதம் குறைக்கப்பட்டுள்ளதால், சில வாரங்களில் புதிய கடன்களுக்கான வட்டி விகிதங்கள் குறையலாம். இது புதிதாக கடன் பெற திட்டமிடுபவர்களுக்கு நன்மை தரும்.
இதையும் படிக்க: வருடத்திற்கு ₹12,000 முதலீடு செய்வதால் கிடைக்கும் ரிட்டன் எவ்வளவு தெரியுமா…?
எளிய உதாரணம்:
உங்களிடம் 20 வருட காலத்திற்கு 8.5% வட்டி விகிதத்தில் ரூ.50 லட்சம் வீட்டுக் கடன் இருப்பதாக வைத்துக்கொள்வோம்.
தற்போது உங்கள் வீட்டுக்கடனுக்காக நீங்கள் மாதம் ரூ.43,391 வங்கிக்கு வட்டியாக (EMI) செலுத்திக்கொண்டிருக்கிறீர்கள். இந்த நிலையில், ரெப்போ விகிதம் குறைந்துள்ளதால், நீங்கள் மாதம் இனி ரூ.42,603 மட்டுமே செலுத்துவீர்கள். இதன் மூலம் உங்களுக்கு வருடம் ரூ.9546 சேமிப்பீர்கள்.
April 09, 2025 12:48 PM IST
RBI Repo Rate | ரெப்போ விகிதம் என்றால் என்ன..? ரிசர்வ் வங்கி அறிவிப்பால் EMI எவ்வளவு குறையும்? எளிய விளக்கத்துடன் ஓர் அலசல்


